வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2022ல் அடுத்தடுத்து விவாகரத்து செய்த கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள்.. தனுஷை தொடர்ந்து பிரிந்த 2 ஜோடிகள்

இந்த 2022ஆம் ஆண்டு கோலிவுட்டின் பல முக்கிய பிரபலங்கள் தங்களுடைய விவாகாரத்து அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினர். சிலர் இதில் இரண்டாவது திருமணமே செய்து கொண்டனர். 2021 ஆம் ஆண்டு இறுதியில் சமந்தா-நாக சைதன்யா பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த இந்த விவாகரத்து அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு கோலிவுடையே உலுக்கி விட்டது என்றே சொல்லலாம்.

தனுஷ்-ஐஸ்வர்யா: 2022 ஆம் ஆண்டின் முதல் விவாகரத்து அறிவிப்பு தனுஷ்-ஐஸ்வர்யா தான். மற்ற தம்பதிகளின் விவாகரத்து பற்றியாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக தகவல் கசிந்தது. ஆனால் இவர்கள் விவாகரத்து செய்வார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனாக கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ், 2005 ஆம் தன்னுடைய காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கரம் பிடித்தார். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.

தனுஷை பற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளி வந்தாலும் இருவரது திருமண வாழ்க்கையிலும் எந்த விரிசலும் இல்லாதது போல தான் காணப்பட்டது. திடீரென இருவரும் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா R தனுஷ் என்ற பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றி கொண்டார். இவர்கள் விவாகரத்து பற்றியோ அல்லது அதற்கான காரணம் பற்றியோ தெளிவான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

Also Read: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன சீக்ரெட்.. ஏற்றுக்கொள்வார்களா.?

பாலா-முத்து மலர்: இயக்குனர் பாலாவுக்கும் அவருடைய உறவுக்கார பெண்ணான முத்து மலருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு மதுரையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரார்த்தனா என்ற ஒரு மகள் இருக்கிறார். முத்து மலர் சோசியல் மீடியாவில் ஆக்டிவான பெர்சன். நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, ப்ரீத்தா ஹரி, நடிகை சினேகாவுடன் அதிகமாக புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்ட்டாகிராமில் பகிர்வார்.

பாலா மற்றும் முத்து மலர் இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி இந்த தம்பதிகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்து விட்டது.

Also Read: 18 வருடம் கழித்து மனைவியை விவாகரத்து செய்த பாலா.. காரணம் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

இமான்-மோனிகா : கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் D இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இமான் தன்னுடைய மனைவி மோனிகாவை விவாகரத்து செய்து விட்டதாக டிவிட்டரில் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மறைந்த பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். எமிலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த திருமணத்திற்கு பிறகு இமானின் முதல் மனைவி மோனிகா அவருக்கு எதிராக பல கருத்துக்களை டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார்.

Also Read: இமானின் முன்னாள் மனைவி விட்ட சவால்.. பயில்வான் கூறிய பகிர் தகவல்

Trending News