வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இவ்வளவு சண்டையிலும் நன்றி சொல்ல ஒரு மனசு வேணும் சார்.. சூர்யாவை புல்லரிக்க வைத்த அமீர்

Kollywood Director Amir’s first film Mounam pesiyadhe complete 21 years: ஒவ்வொரு மனிதனும் தனது ஆசை, நிராசைகளை தாண்டி தனக்குரிய லட்சியத்தை அதற்குரிய பருவத்தில்  அடைவது என்பது பலருடைய வாழ்க்கையிலும் கேள்விக்குறியாகவே உள்ளது. சினிமா கனவுடன் வருபவர்கள் அதில் ஜெயிப்பது என்பது “முடவன் கொம்புத்தேனை அடைவதற்கு  சமம்”.

மதுரையில் இருந்து சாதிக்கும் வெறியோடு வந்து பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த அமீர், 2002 தனது முதல் படமான மௌனம் பேசியதே மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். திகட்டாத திரைக்கதை, தெறிக்கும் வசனங்கள், பகட்டு காட்டாத நடிகர்கள் என ஒட்டுமொத்த தேர்வுகளையும் முதல் படத்தில் இறக்கி படத்தை வெற்றி பெற செய்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் அமீர்.

இளஞ்ஜோடிகள் டூயட் பாடுவதே ரசித்திருந்த ரசிகர்களை முதிர்தம்பதிகளின் காதலை  பாடலில் வெளிப்படுத்தி, உண்மையான காதலுக்கு நாயகனை சபாஷ் போட வைத்து அறிவற்ற மோகத்தால் ஏற்படும் காதலை பிரிக்கவும் செய்திருப்பார். இயக்குனரின் இந்த அணுகுமுறை ரசிகர்களை கவர்ந்ததின் மூலம் மௌனம் பேசியதை பலரும் பேச வைத்தார்.

Also read: நல்லான் வகுத்ததா நீதி இங்கே வல்லான் வகுத்ததே நீதி.. 17 வருட வலியை கொட்டிய பருத்திவீரன் அமீர்

மௌனம் பேசியதே படம் வெளிவந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் அமீர், கனவை நனவாக்கி கை தூக்கி விட்ட தயாரிப்பாளர் கணேஷ் ரகு, படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா மற்றும் டெக்னீசியன்கள்  அனைவருக்கும் மேலும் தமிழக மக்களுக்கும் ரசிகர்களுக்கும்  தனது நெஞ்சார்ந்த நன்றியை பகிர்ந்து உள்ளார்.

பாலாவின் நந்தாவினால் உதவி இயக்குனராக அமீர் பணி புரியும் போதே சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. பருத்திவீரன் படத்திலும் கார்த்தியை திறமையாக செதுக்கியதில் அமீரின் பங்கு உள்ளது.   சிலரது குள்ளநரித்தனத்தினால்  சமீபகாலமாக அமீர் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

பல காலமாக பருத்திவீரன் பிரச்சனையில் சூர்யா கார்த்தி உடனான பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அமீரின் இந்த பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சூர்யாவும் இதற்கு பதில் எதுவும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். நன்றி மறந்ததினால் வந்த விளைவை நன்றி கூறி முடித்துள்ளார் அமீர்.

Also read: இவரை ஏமாற்றிய இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படங்கள்… விழித்துக் கொண்ட சூர்யா

Trending News