சினிமாவைத் தாண்டி 5 பிசினஸில் மிரள விடும் சூர்யா.. இப்படியும் சம்பாதிக்கலாமா என ஆச்சரியத்தில் கோலிவுட்

சமீப காலமாக சூர்யாவுக்கு நடப்பதெல்லாம் அமோகமாக இருக்கிறது. தொடர் வெற்றிகளின் மூலம் அவர் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேஷன், தயாரிப்பு நிறுவனம் என கலக்கிக் கொண்டிருக்கும் சூர்யா இன்னும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் செய்து வரும் ஐந்து பிசினஸ் பற்றி இங்கு காண்போம்.

2டி என்டர்டெயின்மென்ட் தன் மனைவி மற்றும் தம்பியுடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா முதன்முதலாக 2013 ஆம் ஆண்டு சிங்கம் 2 படத்தை விநியோகம் செய்தார். அதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். அதை தொடர்ந்து தற்போது இந்த நிறுவனம் பல தரமான படங்களை கொடுத்து வருகிறது.

Also read: 2 கோடிக்கு ஆசைப்பட்ட மொத்தத்தையும் இழந்த வெற்றிமாறன்.. பாலாவை போல் தூக்கி எறிந்த சூர்யா

ரியல் எஸ்டேட் பொதுவாகவே சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பிரபலங்கள் அனைவரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சூர்யாவும் இந்த பிசினஸில் அதிகமாக கல்லா கட்டி வருகிறார். அது மட்டுமல்லாமல் ஏராளமான பண்ணை வீடுகளையும் இவர் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இதிலும் அவருக்கு நல்ல லாபமே கிடைத்து வருகிறது.

காற்றாலை கோயம்புத்தூரில் இவருக்கு சொந்தமாக 50 காற்றாலைகள் இருக்கிறது. பொதுவாக இது போன்ற தொழில்களில் ஈடுபடுவோர் அதற்கான அனுமதியை முறையாக பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட விதிமுறைகளும் இருக்கிறது. அப்படி ஆரம்பிக்கப்படும் இந்த பிசினஸ் பல மடங்கு லாபத்தை கொடுக்கும். அந்த வகையில் சூர்யா இந்த பிசினஸ் மூலம் அதிக லாபம் பார்த்து வருகிறார்.

Also read: அந்த ஒரு விஷயத்தில் சூர்யாவை அடிச்சுக்க ஆளே இல்ல.. அடுத்து உடைய போகும் அஜித், விஜய்யின் மார்க்கெட்

ஆடை ஏற்றுமதி இந்த பிசினஸை அவர் மும்பையில் செய்து வருகிறார். இதற்காக அவர் அடிக்கடி அங்கு சென்று கொண்டிருப்பதாக ஏற்கனவே கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தத் தொழில் அவருக்கு லாபகரமாக சென்று கொண்டிருக்கிறதாம். இதன் மூலம் அவர் பல இடங்களுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறார்.

ஏர்போர்ட் பார்க்கிங் இப்பொழுதெல்லாம் ஏர்போர்ட்டுக்கு வந்து செல்லும் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு எக்கச்சக்கமாக கட்டணம் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த தொழிலையும் சூர்யா விட்டு வைக்கவில்லை. இதன் மூலமும் அவர் நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார். இப்படி இவர் நடிப்பை தாண்டி பிசினஸில் அமோகமாக சம்பாதித்து வருவது பார்ப்பவர்களை வியக்க வைத்திருக்கிறது. அட இப்படி கூட சம்பாதிக்கலாமா என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Also read: பாலாவின் வகையறாவையே வச்சு செய்யும் சூர்யா.. வணங்கான் படத்திற்கு பிறகு குளறுபடியான அடுத்த படம்