பூட்டிய வீட்டுக்குள் நடிகரின் சடலம்.. அசோக் செல்வனை சுற்றலில் விட்ட அக்டர் சாவின் பின்னணி

Shocking Actor’s Death: இரண்டு நாட்களாக பூட்டிய வீட்டிற்குள் பிரபல தமிழ் நடிகர் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நண்பர்கள் போனில் தொடர்பு கொள்ள முடியாததாலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியததாலும் தான் நடிகர் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவாவின் “சொன்னா புரியாதா” படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரதீப்  கே விஜயன். இவர் தமிழில் தெகிடி, இரும்புத்திரை, ருத்ரன், டெடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தங்கி இருந்த வீட்டிற்குள் இவர்   இறந்து கிடந்துள்ளார்.

அசோக் செல்வன் நடித்த தெகிடி படம் இவருக்கு சினிமாவில் ஒரு டர்னிங் பாயிண்ட்டை கொடுத்தது.  சஸ்பென்ஸ், திரில்லராக அமைந்த அந்த படத்தில் பேங்க் மேனேஜராக நடித்திருப்பார். இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு கொலைகள் செய்யப்படும்  கதைக்களம் கொண்டது தான் இந்த படம்.

இந்த படத்தில் அசோக் செல்வனை சுற்றலில் விடும் பேங்க் பணியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்  பிரதீப் கே விஜயன். மிகவும் குண்டான தோற்றம் உடையதால் பல படங்களில் காமெடி  கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இன்ஜினியரிங் படிப்பை முடித்து இருந்தாலும் இவருக்கு சினிமா மீது அதிக நாட்டம் இருந்து வந்தது.

அசோக் செல்வனை சுற்றலில் விட்ட நடிகர் சாவின் பின்னணி

நடிப்பு மற்றும் படத்திற்கு சப் டைட்டில்கள் போடும் பணிகளையும் செய்து வந்தார். சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் ஏதுமில்லை.சென்னை பாலவாக்கத்தில் தனியாக ரூம் எடுத்து தங்கி இருந்தார். இவரது நண்பர்கள் இவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது இரண்டு நாட்களாக இவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

பாலவாக்கத்தில் இவர் தங்கி இருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, காவல்துறை உதவியுடன் கதவை  உடைத்து பார்த்தவுடன் தான் இவர் இறந்து கிடப்பதே வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இவர் பின் தலையில் காயங்கள் இருக்கின்றதாம். அதனால் வழுக்கி  விழுந்து விட்டாரா, அதன் காரணமாக மாரடைப்பு வந்ததா என்று விசாரித்து வருகிறார்கள். இல்லையென்றால் சாவில் வேறு ஏதேனும் மர்மம்   இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரிக்க உள்ளனர்களாம்.