வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முன்னணி ஹீரோக்களின் 25வது படங்கள்.. இந்த விஷயத்தில் விஜய்யை முந்திய அஜித்

Kollywood Top Heroes: சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக நீண்ட வருடங்கள் நிலைத்திருப்பது என்பது ரொம்பவும் பெரிய விஷயம். இதனால்தான் ஹீரோக்களின் 25, 50, 100 வது படங்கள் அதிக அளவில் கொண்டாடப்படுகின்றன. தமிழ் சினிமாவின் இன்றைய டாப் ஹீரோக்களின் 25 வது படங்களை பற்றி பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: 1978 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பைரவி படம் தான் ரஜினிகாந்தின் 25 ஆவது படம். இந்த படம் தான் ரஜினி முதல் முறையாக சோலோ ஹீரோவாக நடித்த படம். இந்த படத்திலிருந்து தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டது.

கமல்: 1975 ஆம் ஆண்டு வெளியான மேல்நாட்டு மருமகள் படம் தான் கமலின் 25 வது படம் ஆகும். இந்த ஒரு படம் தான் கமல் மற்றும் வாணி கணபதி இணைந்து நடித்தது. சிவக்குமார் மற்றும் கமலஹாசன் இருவரும் அண்ணன் தம்பியாக நடித்திருப்பார்கள்.

விஜய்: காதலுக்கு மரியாதை படத்தின் கூட்டணியில் மீண்டும் உருவான படம் தான் கண்ணுக்குள் நிலவு. இதுதான் விஜய்யின் 25 வது படம், இந்த படம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியானது. மேலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: விஜய்க்கு அஜித் சப்போர்ட் கண்டிப்பாக வேணும்.. சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர்!

அஜித்: 1999 ஆம் ஆண்டு ரிலீசான அமர்க்களம் படம் தான் அஜித்தின் 25வது படம். இந்த படம் அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அமர்க்களம் படத்திற்கு பிறகு தான் அஜித்திற்கு ரசிகர்கள் மன்றமும் அதிகரித்தது. என்னதான் விஜய் அஜித்திற்கு முன்பே சினிமாவில் இருந்தாலும், அஜித்தின் 25வது படம் தான் முதலில் ரிலீஸ் ஆனது.

சூர்யா: இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படம் தான் சூர்யாவுக்கு 25 ஆவது படம். காக்க காக்க படத்தில் ஏற்கனவே சூர்யாவை போலீசாக பார்த்திருந்தாலும், இந்தப் படத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஜெயித்திருந்தார் சூர்யா.

சிம்பு: கௌதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷாவுடன் சிம்பு ஜோடி போட்ட படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. சிம்பு மற்றொரு பரிமாணமாக காட்டிய இந்த படம் தான் அவருக்கு 25 ஆவது படம். ரசிகர்களின் ஃபேவரிட் மூவி லிஸ்ட்டில் எப்போதுமே இந்த படத்திற்கு முக்கியமான இடம் உள்ளது.

தனுஷ்: நடிகர் தனுஷுக்கு வேலையில்லா பட்டதாரி படம் தான் 25ஆவது படம். விஐபி என்னும் பெயரில் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக அமைந்தது. இந்த படம் லோ பட்ஜெட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. படத்தின் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது.

Also Read: விஜய்க்கு கை கொடுக்க வரும் ரஜினி, அஜித்.. இந்தியளவில் பரபரப்பாகும் முக்கிய புள்ளிகள்

Trending News