Koundambalayam: தவளை தன் வாயால் கெட்டுப் போகும்னு சொல்லுவாங்க அது சிறந்த எடுத்துக்காட்டு நடிகர் ரஞ்சித் தான். நேசம் புதுசு, நட்புக்காக போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சையமானவர் ரஞ்சித்.
பெரும்பாலும் இவருக்கு இரண்டு ஹீரோ, வில்லன் போன்ற கேரக்டர்கள் தான் தமிழ் சினிமாவில் கிடைத்தது. பின்னர் நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் தலை காட்டாத இவர் பசுபதி ராக்கம் பாளையம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தார்.
ஆனால் அது பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஒரு பக்கம் அவருடைய மனைவி ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இதனால் விஜய் டிவி இவரை வளைத்து போட்டு செந்தூரப்பூவே என்னும் சீரியல் எடுத்தார்கள்.
இந்த சீரியல் மூலம் ரஞ்சித்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி என்னும் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த கேரக்டரும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
கவுண்டம்பாளையம் ஒரு உப்புமா படம்
அத்தோடு கிடைத்த புகழை அப்படியே தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யாமல் தேவையில்லாத இடங்களில் வாய் கொடுத்து மாட்டிக் கொள்கிறார். கவுண்டம்பாளையம் என்னும் படத்தை இயக்கி நடித்திருக்கும் ரஞ்சித் இந்த படத்தை பற்றி பேசுகிறேன் என்ற பெயரில் சேனலுக்கு சேனல் உட்கார்ந்து சாதிய பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்.
கவுண்டம்பாளையம் படம் ஜூலை 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இது பற்றி வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய பேட்டியில் சில விமர்சனங்களை சொல்லி இருக்கிறார். அதாவது கவுண்டம்பாளையம் படம் ஒரு உப்புமா படம்.
இந்த படத்திற்கு போஸ்டர் கூட ஒழுங்காக டிசைன் பண்ண முடியவில்லை. இது ஒரு படம், இதை பார்க்க வேண்டும் என்று யாருக்குமே மனதில் தோன்றவில்லை. சாதி பற்றி பேசுகிறேன் என்ற பெயரில் ரஞ்சித் இந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார்.
ஒரு போஸ்டரே மக்கள் மனதில் நிற்கும் அளவுக்கு டிசைன் பண்ண முடியவில்லை என்றால், படத்தை பார்க்கும் எண்ணம் ரசிகர்களுக்கு எப்படி வரும் என கேள்வி எழுப்பி இருக்கிறார் அந்தணன்.
மேலும் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் போன்றவர்கள் காலம் காலமாக குறிப்பிட்ட சமூகத்தினர் பட்ட கஷ்டங்களை பற்றி தங்களுடைய படங்களில் பேசுகிறார்கள். அதனால் தான் அந்த படங்கள் வெற்றி பெறுகிறது. சாதிய பெருமை பேசும் படம் கண்டிப்பாக மக்களிடையே செல்லுபடி ஆகாது என சொல்லி இருக்கிறார்.