KPY பாலாவின் ஒவ்வொரு உதவிக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் என்று அந்த உதவிகளைப் பெற்றவர்களும், அவ்வுதவிகளைப் பெறக் காத்திருப்பவர்களுக்கும் தெரிந்ததுதான். அந்தளவுக்கு பாலிவுட்டில் சோனு சூட் மாதிரி கோலிவுட்டில் KPY பாலா. அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் வெறுப்பும் ஏளனமும் அதிகரித்துள்ள நிலையில், அந்தக் காலம் போல இல்லை மனிதர்கள் என்றே பெரியவர்கள் கூறக் கேட்டிருப்போம். காலம் மாறிய போதும் இணையதளங்கள் வருகையால், தொழில் நுட்ப வளர்ச்சியடைந்து மக்கள் கல்வியறிவு பெற்று வாழ்வில் உயர்ந்து வரும் சூழலிலும் ஒருவருக்கு தேடிப் போய் உதவி செய்வது என்பது அரிதான விஷயம்தான்.
இப்படி உதவிகள் செய்வதில் கர்ணனாக இருக்கிறார் கேபிஒய் பாலா. இவர் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமாகி, நகைச்சுவையின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். விஜய் டிவியில் நுழைந்தவர்கள் அனைவரும் திறமைசாலிகள் என்று கூறுவதுபோல் இவரும் அங்கிருந்தபடியே சினிமாவில் அறிமுகமாகி சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
சின்னத்திரை நிகழ்சிகளில் பங்கேற்பு, சினிமாவில் நடிப்பது, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது இப்படி தினமும் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஏழைகளின் கண்ணீரைக் கண்டால் அவரது மனம் இளகிவிடுகிறது. உடனே அவர்களைத் தேடிப்போய் அவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பாலா.
அந்த வகையில், பாலா செய்யும் உதவிகள் நேரடியாகவே மக்களைச் சென்றடைந்தாலும் அவர்கள் இதை ஏன் மீடியாக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்? எல்லாம் விளம்பரத்திற்குத்தானா ?? என்பதுபோல் நெட்டின்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், சில நாட்களாக பாலாவின் உதவிகளும், அவரைப் பற்றிய செய்திகளும் இல்லாமல் இருந்த நிலையில் அவர் தற்போது, சினிமாவில் 3 படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதில் ஒரு படம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இப்படத்தை வைபவ் நடிப்பில் ரணம் என்ற படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் இப்படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.தமிழில் காமெடியன்களாக இருந்து ஹீரோவாக மாறிய நடிகர்களின் வரிசையில் பாலாவும் இணைந்துள்ளார். இவரது வளர்ச்சி சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்குமா என்பது இனி போக போகப் தெரியும்…இந்த நிலையில், அவர் செய்யும் உதவிகள் ஏன் இப்போது குறைந்துள்ளது என கேள்வி எழுந்தது. இதற்கு அவர் சினிமாவில் பிஸியாக நடிப்பதால்தான் என்று கூறப்படுகிறது. பாலாவைப் பற்றி செய்திகள் குறைந்துள்ள போதிலும் அவர் செய்யும் உதவிகள் குறையவில்லை எனத் தகவல் வெளியாகிறது.
இதில், பாலா நிறைய உதவிகள் செய்திருந்தாலும், அதில் மலைவாழ் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தது; ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி, நடிகர் பாலா லட்சுமணனுக்கு செய்த உதவி; மிக்ஜாம் புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று குடும்பத்திற்கு தலா 2000 ரூபாய் என தன் சொந்தப் பணம் ரூ.2 லட்சம் செலவு செய்திருந்தார். பெட்ரோல் பங்கில் பணியாற்றும் ஒருவர் பைக் வாங்க காசியில்லை என்று கூறிய வீடியோ வைரலானதை அடுத்து அவருக்கும் ஒரு பைக் வாங்கிக் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று காது கேட்காத குழந்தைகள் 100 பேருக்கு செவித்திறன் கருவிகளை வழங்கியுள்ளார் பாலா. இந்த வீடியோவை அவர் தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது உதவும் குணம் தொடர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.