ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உதயநிதி மறுத்ததால் ஜெயம் ரவியுடன் கமிட்டான கிருத்திகா.. விஜய் சேதுபதி பட சாயலில் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு

Jayam Ravi JR33 Movie: ஜெயம் ரவி எப்போதெல்லாம் துவண்டு போய் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறாரோ, அப்போது இவருக்கு தோள் கொடுத்து பக்க பலமாக இவரை தூக்கி விடுவது இவருடைய அண்ணன் மோகன் ராஜா. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக முழுமையான வெற்றியை பார்க்க முடியாமல் ஜெயம் ரவி தவித்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான் ஜெயம் ரவியின் வெற்றிப்படமான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை மறுபடியும் மோகன் ராஜா இயக்கிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படம் வெற்றி பெற்று ஜெயம் ரவிக்கு மீண்டும் நல்ல காலம் பிறப்பதற்கு வாய்ப்பாக அமையப் போகிறது.

Also read: ஜெயம் ரவி உடம்பில் இவ்வளவு பிரச்சனைகளா.? மணிரத்னத்தால் வந்த வம்பு

இதற்கிடையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படம் படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதோடு இவருடைய கேரியர் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று பலரும் பேசத் தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் மறுபடியும் இவருடைய கேரியரை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக JR 33 படத்தில் கமிட் ஆயிருக்கிறார்.

அந்த வகையில் இப்படத்தை இயக்கப் போவது யார் என்றால் கிருத்திகா உதயநிதி தான். இவர் ஏற்கனவே வணக்கம் சென்னை, காளி, பேப்பர் ராக்கெட் படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அந்த வகையில் மறுபடியும் இயக்குனர் பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் இந்த கதை உதயநிதியிடம் தான் சொல்லப்பட்டிருக்கிறது.

Also read: ஜெயம் ரவி, நயன்தாரா போதைக்கு ஊறுகாய் ஆன இறைவன்.. ஏட்டிக்கி போட்டியா வசூலித்த பொன்னியின் செல்வன்

ஆனால் அவர் மறுத்து விட்டதால் அந்த வாய்ப்பு ஜெயம் ரவிக்கு கிடைத்துவிட்டது. இந்தப் படத்தில் இவருக்கு ரொமான்டிக் ஹீரோயினாக நடிக்கப் போவது கொழுக்கு முழுக்குன்னு இருக்கும் நடிகை நித்யா மேனன் தான். முக்கால்வாசி இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியாகவும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பையும் பெற்றுவிடும். அந்த அளவிற்கு வெற்றி நாயகியாக தான் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து இப்படத்தை தயாரிக்கப் போவது ரெட் ஜெயிண்ட். அத்துடன் இப்படத்திற்கு இசையமைக்கப் போவது ஏஆர் ரகுமான். முதலில் அனிருத் தான் இசையமைக்க போவதாக இருந்தது. ஆனால் அவர் இந்த கதைக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பதற்காக ஏ ஆர் ரகுமானை கமிட் பண்ணி இருக்கிறார்கள். ஏனென்றால் இப்படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் கதையாகத்தான் இருக்குமாம். அதுவும் எப்படி என்றால் விஜய் சேதுபதி நடித்த 96 படம் போல். அதனால் கிடைத்த இந்த வாய்ப்பையாவது சரியாக பயன்படுத்துகிறாரா என்று பார்க்கலாம்.

Also read: பிட்டு படம் போல குடும்பத்தோடு பார்க்க முடியாத ஜெயம் ரவியின் 6 மூவிஸ்.. மோசமான லிஸ்டில் சேர்ந்த இறைவன்

Trending News