வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பிரபலத்திடம் சத்தியம் வாங்கிய ரஜினிகாந்த்.. கெட்ட வார்த்தை பேசினாலும் அதுவும் ஒரு அளவு தான்

ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நடிகர், நடிகைகளை காட்டிலும் இயக்குனரின் உழைப்பு தான் அதிகமாக உள்ளது. இதனால் நடிகர்களிடம் சிறந்த நடிப்பை பெற வேண்டும் என்பதால் சில இயக்குனர்கள் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.

அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது தவறு நடந்தால் சில இயக்குனர்கள் கெட்ட வார்த்தை பேசுவது நிறுத்தமாட்டார்கள் அந்த அளவிற்கு கோபம் அடைவார்கள். உதாரணமாக இயக்குனர் பாலா நடிகர், நடிகைகளிடம் கோபமாக பேசுவது அதை காட்டிலும் ஒருபடி மேலாக அடிக்கவும் செய்வார் என்ற செய்திகளும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் மேடையில் பேசிய ராதாரவி ரஜினிகாந்தை பற்றி வெளிப்படையாகப் பேசினார். ரஜினிகாந்தின் லிங்கா படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கேஎஸ் ரவிக்குமார் இடம் ரஜினிகாந்த் சத்தியம் வாங்கியதாக கூறியுள்ளார். அதாவது இப்படம் ஒரு சிவன் கோயில் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க வேண்டி இருந்ததாம்.

அங்கு ஏதாவது தவறு நடந்தால் கோயிலுக்குள் நீங்கள் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஏனென்றால் ரஜினி ஒரு ஆன்மீகவாதி அதனால் கோயில்களில் கெட்ட வார்த்தை பேசுவது அவருக்குப் பிடிக்காது என கேஎஸ் ரவிக்குமார் இடம் ரஜினி வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும், ரஜினிகாந்த் எப்போதும் கடவுள் மீது அதிக நம்பிக்கை உள்ளவர். ரஜினி அடிக்கடி ராகவேந்திரா கோயிலுக்கு செல்லக்கூடியவர். மேலும் இவர் தனது நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் நடித்து அதை தனது இதயத்திற்கு நெருக்கமான ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிக்கு அர்ப்பணித்துள்ளார்.

அதேபோல் பாபா படத்திலும் நடித்து தனது கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இவ்வாறு தனது படங்கள் மூலமாகவும் கடவுள் பக்தியை ரசிகர்களிடம் வெளிக்காட்டியுள்ளார் ரஜினி. மேலும், ரஜினிகாந்த் எப்போதும் யாரிடமும் அதிகம் கோபப்படமாட்டார் எனவும் அந்தப் பேட்டியில் ராதாரவி கூறியுள்ளார்.

Trending News