வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி முன்னிலையில் அவமானப்பட்ட KS ரவிக்குமார்.. வேண்டுமென்றே பழி வாங்கிய பிரபலம்

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் கே எஸ் ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படையப்பா, முத்து, லிங்கா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் பல வருடங்களாகவே நெருங்கிய நட்பு இருக்கிறது.

அதேபோன்று ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அவர்கள் இருவரும் மிகவும் கலகலப்புடன் தான் பேசிக் கொள்வார்களாம். ஒருமுறை படையப்பா திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் இருவரும் இணைந்து வரும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

Also read : 100 படங்களுக்கு மேல் இசையமைத்து நெஞ்சில் குடியேறிய பிரபலம்.. ஆனாலும் வாய்ப்பு தர மறுக்கும் ரஜினி,கமல்

பொதுவாகவே கே எஸ் ரவிக்குமார் இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் அவர் ஒரு காட்சியிலாவது நடித்து விடுவார். அதே போன்று தான் படையப்பா திரைப்படத்தில் அவர் ரஜினியுடன் இணைந்து கிக்கு ஏறுதே என்ற பாடலில் நடனம் ஆடினார்.

அந்த காட்சியை அவர் இயக்குனர் மற்றும் நடிகரான ரமேஷ் கண்ணாவை டைரக்ட் செய்ய சொல்லி இருக்கிறார். இதற்காகவே காத்திருந்த ரமேஷ் கண்ணா வேண்டுமென்றே அந்த காட்சி நன்றாக வந்த போதிலும் ஒன் மோர், ஒன் மோர் என்று கூறிக் கொண்டே இருந்தாராம்.

Also read : வயசில சின்னவங்க, இல்லன்னா உங்க கால்ல விழுந்துருவேன்.. 23 வருட ரகசியத்தை மேடையில் பேசிய ரஜினி

முதலில் அவர் ஒன் மோர் கூறிய போது ரஜினியே சற்று திகைத்துப் போனாராம். ஏனென்றால் கே எஸ் ரவிக்குமார் நடிப்பு என்று வந்துவிட்டால் நடிகர்கள் பர்பெக்ட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அதேபோன்றுதான் அவருடைய நடிப்பும் இருக்கும்.

அப்படிப்பட்டவரை ரமேஷ் கண்ணா ஒன் மோர் என்று கூறியதால் ஒட்டுமொத்த யூனிட்டும் அதிர்ந்து போய் இருக்கிறது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் கே எஸ் ரவிக்குமார் மீண்டும் மீண்டும் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதன் பிறகு தான் அவருக்கு ரமேஷ் கண்ணா வேண்டுமென்றே கலாட்டா செய்வது புரிந்திருக்கிறது.

அதனால் கடுப்பானே கே எஸ் ரவிக்குமார் ரஜினி இருக்கிறார் என்று கூட பார்க்காமல் ரமேஷ் கண்ணாவை அடிக்க பாய்ந்து இருக்கிறார். அதைப் பார்த்து சூப்பர் ஸ்டார் உட்பட அனைவரும் வெடித்து சிரித்திருக்கிறார்கள். இந்த நிகழ்வை தற்போது ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read : ரஜினி, கமலை மிரட்டிய வில்லன் நடிகர்.. சிவாஜியின் நடிப்பை பார்த்து நடுங்கிய சம்பவம்

Trending News