வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கே எஸ் ரவிக்குமார் பேர் சொல்லும் முத்தான 6 படங்கள்.. 66 வயதில் சேர்த்த மொத்த சொத்து

Ks Ravikumar best 6 Movies: மண்வாசனை மிக்க கிராமிய படங்களை கொடுத்து வெற்றி பெற்றவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். பெரிய பெரிய ஹீரோக்கள் தடுமாறும் நேரத்தில் அவர்களுக்கு சரியான மசாலா படங்களை கொடுத்து தூக்கி விட்ட பெருமை இவருக்கு தான் உண்டு.

காதல் கதை சொல்லி ஜெயித்த இயக்குனர் விக்ரமனின் உதவிய இயக்குனராக பணிபுரிந்தார். புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கே எஸ் ரவிக்குமாருக்கு அடுத்தடுத்து எல்லா படங்களுமே வெற்றியை தான் கொடுத்தன. கே எஸ் ரவிக்குமாரின் 66 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடைய பெயர் சொல்லும் அளவுக்கு ஹிட் அடித்த ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

படையப்பா: தமிழ் சினிமா ரசிகர்களே ஆல் டைம் பேவரைட் மூவி தான் படையப்பா. இப்போ டிவியில் போட்டாலும் குடும்பத்துடன் உட்கார்ந்து ரசிக்கும் அளவுக்கு இந்த படம் இருக்கும். ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்ற வியூகம் எழுந்த காலத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் சீனுக்கு சீன் அரசியல் தாண்டவம் ஆடி இருக்கும். அதிலும் ஊஞ்சலை கீழே எடுத்து அதன் உட்காந்து ரஜினி கால் மேல் கால் போடுவது எல்லாம் இப்போ பார்த்தாலும் மெய்சிலிர்க்கும்.

முத்து: ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியாகி ஜப்பான் வரை ஹிட் அடித்த படம் தான் முத்து. எஜமான், அம்பலத்தான், ரங்கநாயகி, தீபாவளி பரிசு காத்திருக்கிறது, இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ போன்ற வசனங்கள் எல்லாம் இன்று வரை கேட்கும்போது கே எஸ் ரவிக்குமாரின் டிரேட் மார்க் நம் கண் முன் வந்து போகும். இந்த படத்திற்கு பிறகு தான் ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தார்கள்.

நாட்டாமை: நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு, இன்றுவரை மீம்ஸ் டெம்ப்ளேட்டில் கலை கட்டிக் கொண்டிருக்கும் வசனம் இது. ஊர் பஞ்சாயத்து, நாட்டாமை வந்து தீர்ப்பு சொல்வது, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது போன்ற சீன்கள் இன்று வரை இந்த படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பிச்சைக்காரி ஓட பையன் ஊட்டி கான்வென்ட்ல படிக்கிறான், நாட்டாமையோட பங்காளி பையன் நானு கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்ச என கவுண்டமணி கதறும் காமெடி காட்சிகள் எல்லாம் எப்ப பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

பஞ்சதந்திரம்: ஒரு விடுமுறை நாளில் பாப்கான் சாப்பிட்டுக் கொண்டே வயிறு குலுங்க சிரித்துக்கொண்டு ஒரு இரண்டரை மணி நேரம் படம் பார்க்க வேண்டுமானால் அதற்கு சரியான படம் தான் பஞ்சதந்திரம். ஐந்து நண்பர்களின் எதார்த்த வாழ்க்கை, மற்றும் குடும்ப சூழ்நிலையை நகைச்சுவையோடு கலந்து சொல்லி தன்னுடைய பாணியில் பிட் அடித்து இருப்பார் கே எஸ் ரவிக்குமார்.

அவ்வை சண்முகி: கமல் பல வித்தியாசமான முயற்சிகளை தன்னுடைய சினிமா வாழ்க்கையில் எடுத்திருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கேரக்டர் தான் சண்முகி மாமி. கிட்டத்தட்ட அச்சு அசல் 50 வயது மதிக்கத்தக்க பெண் போலவே கமல் இந்த படத்தில் நடித்திருப்பார். மிஸ்ஸஸ் டவுட் பையர் என்னும் ஆங்கில படத்தின் தழுவலாக இருந்தாலும் இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய பாணியில் மசாலாக்கள் கலந்து ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்தார்.

நட்புக்காக; நாட்டாமை படத்தின் வெற்றிக்குப் பிறகு சரத்குமார் மற்றும் விஜயகுமார் கூட்டணியில் உருவான இன்னொரு படம் தான் நட்புக்காக. இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் தனக்காக உயிரைக் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் ஒரு நண்பன் நம் கண் முன் ஞாபகத்திற்கு வந்து போவது உண்டு. அதிலும் இந்த படத்தின் மீசக்கார நண்பா பாடல் இன்றுவரை பேவரைட் லிஸ்டில் இருக்கிறது.

66 வயதில் சேர்த்த சொத்து மதிப்பு

அப்போதைய காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கிய இயக்குனர்களில் கே எஸ் ரவிக்குமாரும் ஒருவர். இவருக்கு சென்னையில் பல இடங்களில் பங்களாக்கள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தில் கப்பல் போல வீடு கட்டி அதில் வசித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் கே எஸ் ரவிக்குமாருக்கு சொந்தமாக நிறைய சொகுசு கார்களும் இருக்கிறது. இவருடைய சொத்து மதிப்பு கிட்டதட்ட 70 கோடி ஆகும்.

கே எஸ் ரவிக்குமாரின் சரித்திரம் படைத்த படங்கள்

Trending News