திங்கட்கிழமை, மார்ச் 10, 2025

பாண்டியனின் மகளுக்கு மோதிரத்தை போட்டு நிச்சயதார்த்தத்தை முடித்த குமரவேலு.. புத்தி கெட்டுப் போன அரிசி

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்திலுக்கு எப்படியாவது பாண்டியனின் இம்சையிலிருந்து தப்பித்தாக வேண்டும். அதற்கு ஒரே வழி மீனா அப்பா சொன்னபடி 10 லட்சம் ரூபாய் பணத்தைக் கட்டி அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து விட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அத்துடன் செந்தில் ஆசையை நிறைவேற்றும் விதமாக கதிர், பாண்டியனிடம் பணம் கேட்கிறார்.

அதற்கு பாண்டியன் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட நிலையில் செந்தில் ஒரு லட்ச ரூபாய் என்று சும்மா போட்டு பார்க்கிறார். ஆனால் ஒரு லட்ச ரூபாய் என்றதுமே பாண்டியன் இவ்வளவு பணத்துக்கு என்ன பண்ண, தேவையில்லாமல் அதுக்கெல்லாம் செலவழிக்க முடியாது என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு கதிர், நீ ஏன் ஒரு லட்ச ரூபாய் சொன்னேன் என்று கேட்டதற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு அப்பா இப்படி சொல்றாங்க,

இன்னும் 10 லட்சம் ரூபாய்னா, என்ன எல்லாம் பேசுவாங்களோ அதனால நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக பழனிவேலு, அண்ணன் வீட்டில் இருக்கும் சுகன்யாவை பார்த்து பேச போகிறார். அப்படி போன பொழுது சுகன்யா வாய்க்கு வந்தபடி பழனிவேலுவை திட்டி அவமானப்படுத்தி விட்டார். இதற்கு எதுவும் பதில் பேச முடியாமல் பழனி அவமானப்பட்டு போய் விடுகிறார்.

ஆனால் இதையெல்லாம் கேட்ட ராஜியின் அம்மா, சுகன்யாவுக்கு அட்வைஸ் பண்ணி பழனிவேலுவை பற்றி எடுத்துச் சொல்கிறார். இருந்தாலும் சுகன்யா அதையெல்லாம் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. கதிர் ஒரு பங்க்ஷன் இருக்கு என்று சொல்லி ராஜியை கூட்டிட்டு போய் விடுகிறார். இதனைத் தொடர்ந்து அரசி பார்க்கில் குமரவேலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

குமரவேலுவும் வந்த நிலையில் அரசிக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கிறார். அப்பொழுது அரசி நீங்களே எவ்வளவு கிப்ட் தான் குடுப்பீங்க. நான் பதிலுக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று சொல்கிறார். குமரவேலு அதெல்லாம் பிரச்சனை இல்லை நான் எவ்வளவு கெட்டவனாக திருந்தாமல் இருந்தேன். ஆனால் உன்னுடைய காதல் என்னை முழுமையாக மாற்றி விட்டது என்று பேசியதும் அரசி மனசு அப்படியே குளிர்ந்து போய்விட்டது.

உடனே குமரவேலு கொடுத்த கிப்ட் ஓபன் பண்ணி பார்க்கிறார், அதில் ஒரு மோதிரம் இருந்ததும் இது தங்கமா? எனக்கு வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் குமரவேலு ஆசை வார்த்தை காட்டி கையிலே போட்டுவிட்டு இது நம்முடைய நிச்சயதார்த்தத்திற்கு போட்ட மோதிரமாக நினைத்துக்கொள். அந்த வகையில் நம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று சொல்லி காதல் லீலைகளை அவிழ்த்து விடுகிறார். இந்த அரசியும் புத்தி கெட்டுப் போய் குமரவேலு என்ன சொன்னாலும் அதை நம்பி விடுகிறார்.

Trending News