சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பாண்டியனின் மகளுக்கு கொக்கி போட குமரவேலு போட்ட பிளான்.. அரசியை காப்பாற்ற போகும் மருமகள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், முத்துவேலு கேட்ட சத்தியத்தின் படி கோமதி அம்மா எனக்கு என்னுடைய மகன்கள் தான் முக்கியம் என்று முத்துவேல் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்ததும் முத்துவேலு இதுதான் கடைசியாக இருக்க வேண்டும். இனி உங்களுக்கும் அந்த குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் பேச்சு வார்த்தையும் வைக்கக்கூடாது.

அப்படி ஏதாவது இருந்துச்சு என்று தெரிந்தால் நான் இந்த வீட்டுக்கே வரமாட்டேன் எங்கேயாவது போய்விடுவேன் என்று பிளாக்மெயிலாக பேச ஆரம்பித்து விட்டார். உடனே பாவம் அந்த வீட்டில் இருக்கும் அம்மாச்சி, மருமகள் அனைவரும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முகத்தை தொங்க போட்டு விட்டார்கள். அடுத்ததாக கதிர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது முதுகில் இருக்கும் தழும்பு எல்லாம் சரியாகி விட்டதா என்று ராஜி பார்க்கிறார்.

உடனே தூங்கிக் கொண்டிருந்த கதிர் பதட்டப்பட்டு எழுந்த நிலையில் ராஜி உன்னுடைய காயம் சரியாகி விட்டதா என்று தான் பார்த்தேன் பயப்படாதே என்று சொல்லி காயங்கள் சரியாகும் வரை நீ காலேஜுக்கு போகக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லி கிளம்பி விட்டார். ஆனால் கதிர் ஏதாவது ஆஃபர் இருந்தா சொல்லு என்று நண்பர்களிடம் ஃபோன் பண்ணி கேட்கிறார்.

அடுத்ததாக தங்கமயில், மீனா மற்றும் ராஜி அடுப்பங்கரையில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது கோமதியும் உதவி செய்ய வந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பாண்டியன், தங்கமயில் பெயரை சொல்லி கூப்பிட ஆரம்பித்து விட்டார். உடனே பாண்டியன், தங்கமயிலை பார்த்து உன் வேலை விஷமாக பேசி வேலை வாங்கிக் கொடுத்தேனே நீ ஏன் இன்னும் போகாமல் இருக்கிறாய் என்று கேட்கிறார்.

அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தங்கமயில் முழித்துக் கொண்டிருந்த நிலையில் அனைவரும் சேர்ந்து இன்னைக்கே வேலையில் சேர்ந்து விடு என்று சொல்லி போய் விட்டார்கள். ஆனால் தங்கமயில், நான் தானே சரவணன் மாமா கிட்ட பேசி வேலைக்கு போக மாட்டேன் என்று சொன்னோம். சரவணன் மாமாவும் சரி என்று சொல்லிட்டாரு. இப்பொழுது அவர் மூலமாக நாம் பாண்டியன் மாமாவிடம் பேசி, வீட்டிலே இருந்து கொள்ளலாம் என்ற நினைப்பில் சரவணன் இடம் பேசப்போகிறார்.

ஆனால் சரவணன், நீ சொன்னது உண்மைதான். ஆனால் அப்பாவுடைய கௌரவத்துக்காகவும் ஆசைக்காகவும் நீ வேலைக்கு போக தான் செய்யணும். அப்பொழுது தான் எனக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லி கிளம்பி விட்டார். ஆனால் தங்கமயில் இந்த விஷயத்தில் பதட்டம் அடைவதை பார்த்த மீனா மற்றும் ராஜி என்ன ஆச்சு உங்க சர்டிபிகேட்ல ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார்கள். அதற்கு தங்கமயில் உண்மையை சொல்ல வரும் பொழுது அங்கே கோமதி வந்து விடுகிறார்.

பிறகு அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை எனக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. வேலைக்குப் போக இஷ்டமே இல்லை என்று சொல்லிய நிலையில் கோமதி, தங்கமயில் இடம் பேசி வேலைக்கு அனுப்ப பார்க்கிறார். அடுத்ததாக குமரவேலு அவருடைய நண்பர்களிடம் பிளான் போடுகிறார். இந்த வழியாகத்தான் அரசி வருவாள். அப்பொழுது நீங்கள் அவளை தொந்தரவு பண்ணும் விதமாக ஏதாவது பேசுங்கள்.

அந்த நேரத்தில் நான் ஹீரோ மாதிரி எண்டரி கொடுத்து அரசியை உங்களிடம் இருந்து காப்பாற்றி விட்டால் அரசி மனதில் நான் இடம் பிடித்து விடுவேன். அதன்பிறகு அரசி கழுத்தில் தாலி கட்டியதும் அவளை கொடுமைப்படுத்தும் பொழுது பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வேதனைப்படுவதை நான் ரசித்துப் பார்க்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்.

இப்படி குமாரவேலு போட்ட பிளான் படி அரசி வரும்பொழுது குமரவேலுவின் நண்பர்கள் தொந்தரவு பண்ணி பேசுகிறார்கள். ஆனால் அரசியை காப்பாற்றுவதற்கு குமரவேலு போகும் முன் வேலைக்குப் போக தயாரான தங்கமயில் சரவணன் வருவதால் அரசியை இவர்கள் இருவரும் சேர்ந்து காப்பாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் குமரவேலு போட்ட பிளான் ஃபெயிலியர் ஆக வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி ஒரு டுவிஸ்ட் வர வாய்ப்பு இருக்கிறது.

Trending News