வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

படத்திற்கு குஷ்பூ சீன் தான் முக்கியம்.. வாரிசு பட எடிட்டரின் பரபரப்பான பேட்டி

பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கும் விஜய்யின் வாரிசு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படத்தில் குஷ்பூ மற்றும் ஜான் விஜய் இருவரின் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள வாரிசு படத்தின் எடிட்டர் பிரவீன் கேஎல் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். வாரிசு படத்தில் மிக சிறப்பாக நடித்திருந்த குஷ்பூ மற்றும் நடிகர் ஜான் விஜய் இருவருக்கும் படக்குழு சார்பாக பிரவீன் கேஎல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

Also Read: வாரிசு, துணிவு எது வெற்றி வாகை சூடியது.. ரெட் ஜெயிண்ட் ரிப்போர்ட்

அதிலும் படத்தின் முதல் பாதியில் குஷ்பூவின் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால் படத்தை ஒரு குறிப்பிட்ட நீளத்துக்குள் வைப்பதற்கு மிகுந்த சவாலாக இருந்த காரணத்தினால், அவர்களது காட்சிகளை நீக்கப்பட வேண்டியதாகி விட்டதாம். சொல்லப் போனால் தளபதி விஜய் உடன் குஷ்பூ இருக்கக்கூடிய புகைப்படங்கள் எல்லாம் தயாராகி விட்டதாம்.

இருப்பினும் இறுதிக்கட்டத்தில் குஷ்பூ நடித்திருந்த காட்சிகளை எல்லாம் நீக்க வேண்டியதாகிவிட்டது. இது குறித்து குஷ்பூவிடமும் கேட்டபோது, படத்திற்கு எது நல்லது என்று நினைக்கிறீர்களோ அதையே செய்யுங்கள் என்று பெருந்தன்மையுடன் சொல்லி இருக்கிறார். அதிலும் படத்தில் முக்கியமாக நீக்கப்பட்ட காட்சிகள் என்றால் அது குஷ்பூ மற்றும் ஜான் விஜய் இருவரும் நடித்த காட்சிகள் தான்.

Also Read: தெலுங்கிலும் விட்டுக் கொடுக்காமல் போட்டி போட்ட வாரிசுடு.. இமயம் போல் நின்ற வால்டர் வீரய்யா, வீரசிம்மரெட்டி

5 நிமிடத்திற்கு இருக்கும் காட்சிகளை இரண்டரை நிமிடத்திலேயே அழகாக சொல்லிவிட முடியும் என்றால் மீதமிருக்கும் இரண்டரை நிமிடம் தேவை இல்லை. அப்படிதான் குறைக்கப்பட்டது. இருப்பினும் இதை செய்வது மிக கடுமையான முடிவு. இந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும் என்றால் நிறைய பணம் செலவிடுவது மட்டுமல்லாமல் பலரும் தங்களது உழைப்பை கொடுத்திருக்கின்றனர்.

குறிப்பாக ஒளிப்பதிவாளர் குறைந்தது 15-லிருந்து 20 நாட்கள் அந்த பகுதியை படமாக்க உழைத்திருப்பார். ஆனால் எடிட்டிங் என்கின்ற பெயரில் அதை நீக்கியது மிகவும் கஷ்டமாக இருந்தது. இருப்பினும் இது ஒட்டுமொத்த படகுழுவின் திட்டம் என்பதால் அதை செய்ய வேண்டியதாக இருந்தது. ஆனால் வாரிசு படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இணைத்து வெளியிடும் திட்டம் படக்குழுவுக்கு இருக்கிறது.

Also Read: பாக்ஸ் ஆபிஸை திணறடித்த 5ம் நாள் மொத்த வசூல்.. தொடர் விடுமுறையில் அடித்து நொறுக்கும் வாரிசு

அப்படியும் முடியாவிட்டால் யூட்யூப்-ல் ரிலீஸ் செய்யும் திட்டமும் உள்ளது என்று வாரிசு படத் தொகுப்பாளர் பிரவீன் கேஎல் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும் தளபதியின் படம் என்றால் நாலரை மணி வரை கூட பார்ப்போம் நீங்கள் திரையிடுங்கள் என்று கெத்து காட்டுகின்றனர்.

Trending News