வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பூ.. இப்படி ஒரு பிரச்சனையா! வைரலாகும் ட்விட்

நடிகை குஷ்பூ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கான ரசிகர் கூட்டத்தை தற்போது வரை தக்க வைத்துள்ளவர் நடிகை குஷ்பூ.

எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு குஷ்பூக்கு தீவிர ரசிகர்கள் இருந்தனர். முதல்முறையாக இவருக்கு தான் கோயிலும் கட்டி இருந்தனர். சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது பங்களிப்பை குஷ்பூ திறம்பட காண்பித்து வருகிறார்.

Also Read : அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் குஷ்பூ நடித்திருந்தார். தற்போது விஜயின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

தற்போது படு ஸ்லிம்மாக மாறி உள்ள குஷ்புவின் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூ, மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு முதுகெலும்பு தொடர்பான பிரச்சனைக்காக தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளார்.

Also Read : மெலிந்து ஸ்லிம்மாக மாறிய குஷ்பூவின் புகைப்படங்கள்.. விட்டா 51 வயதிலும் ஒரு ரவுண்டு வருவாங்க போல!

மேலும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி விடுவேன் என குஷ்பூ குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனது ரசிகர்களுக்கு விஜயதசமி வாழ்த்துக்களை குஷ்பூ தெரிவித்து இருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் குஷ்பூ விரைவில் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

குஷ்பூ சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல் சினிமா, அரசியல், சீரியல் என படு பிஸியாக இருந்த சூழ்நிலையில் தற்போது முதுகெலும்பு பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகிறார். மேலும் குஷ்பூ குணமடைந்த உடன் பட சூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கலாம்.

kushboo

Also Read : கோலிவுட்டில் மறக்க முடியாத 9 ஜோடிகள்.. இப்போதும் ட்ரெண்டாகும் சின்னத்தம்பி பிரபு, குஷ்பூ

Trending News