பா ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டில் நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் குதிரைவால். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்தின் கதையை ஜி ராஜேஷ் எழுதி இருக்கிறார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் மற்றும் ஷியாம் சுந்தர் இருவரும் இப்படத்தை இயக்கியுள்ளனர். ஃபேண்டசி கதையாக உருவாகியிருக்கும் இப்படம் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை.
ஏனென்றால் இந்த திரைப்படத்தை புரிந்து கொள்வதில் சில முரண்பாடுகள் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். திரைக்கதையின் போக்கில் சில தொய்வும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் படம் பார்க்கும் போது சிறிது சலிப்பை தருகிறது.
![kudhiraival](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/03/kudhiraival.jpg)
மேலும் இது போன்ற கதைகள் நம் தமிழ் சினிமாவில் நிறைய முறை வந்து இருக்கிறது. அதனால் இப்படத்தில் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் கிடையாது என்றும் படம் முழுக்க பயணிக்கும் கலையரசன் படத்திற்கு ஒரு பலமாக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
![kudhiraival](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/03/kudhiraival1.jpg)
அனைத்தும் நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் ஏதோ ஒன்று குறைவாகவும் அதுதான் படத்தை பார்க்கும் பொழுது சோர்வை தருவதாகவும் ஒரு சிலர் கூறினாலும் சிலர் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை என்றாலும் இந்த வித்தியாசமான முயற்சிக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
![kudhiraival](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/03/kudhiraival2.jpg)
ஆகமொத்தம் குதிரைவால் திரைப்படம் இப்படி பல நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. புதுமுக இயக்குனர்களை வைத்து இந்த படத்தை தைரியமாக தயாரித்த ரஞ்சித்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
![kudhiraival](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/03/kudhiraival3.jpg)