ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கோவக்கார இயக்குனராக மாறிய ஐஸ்வர்யா.. மொய்தீன் பாயுடன் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் இப்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருவது அவருடைய ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது. அதிலும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று நினைத்திருந்த ஜெயிலர் முன்கூட்டியே ஆகஸ்ட் மாதம் வெளியாவது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து தலைவர் இப்போது லால் சலாம் படத்திலும் பிசியாகிவிட்டார்.

அப்பாவுடன் சீரியஸ் டிஸ்கஷனில் இருக்கும் ஐஸ்வர்யா

rajini-aishwarya
rajini-aishwarya

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா தயாரித்து வரும் இப்படம் ஆரம்பத்திலேயே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருவது தான். அது என்ன கதாபாத்திரம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சில நாட்களுக்கு முன்பு பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

Also read: பல ஹீரோக்களை மிகப்பெரிய திறமைசாலியாக மாற்றிய ஒரே வில்லன்.. பாட்ஷா படத்துல ரஜினிக்கு இருந்த நடுக்கம்

அதில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் சூப்பர் ஸ்டார் வர இருக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது. அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும் சில கேலியான விமர்சனங்களும் வந்தது. ஏனென்றால் போஸ்டர் ரணகளமாக இருக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.

ரஜினி – கபில்தேவ்

rajini-laal-salam
rajini-laal-salam

இருப்பினும் இப்படத்தை ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான ஒரு போட்டோ சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் சூப்பர் ஸ்டார் வெள்ளை நிற உடையில் மொய்தீன் பாயாக மாறி இருக்கிறார். அதே போன்று ஐஸ்வர்யாவும் ரொம்பவும் கோவக்கார இயக்குனர் போன்று தன் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

கண்டிப்பான இயக்குனரான ஐஸ்வர்யா

aishwarya-kapil dev
aishwarya-kapil dev

Also read: காலம் கடந்து பேசும், ரஜினியின் கடைசி இயக்குனர் இவர் தான்.. மிஷ்கின் கொடுத்த அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

ஏனென்றால் அந்த போட்டோவில் இருவரும் சீரியஸ் டிஸ்கஷனில் இருப்பது நன்றாகவே தெரிகிறது. அதாவது அந்த போட்டோவில் ரஜினி ஏதோ ஒன்றை ஐஸ்வர்யாவிடம் கேட்பது போன்றும் அதற்கு அவர் முகத்தை சீரியஸாக வைத்திருப்பது போன்றும் இருக்கிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா ரொம்பவும் கரார் இயக்குனராக இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்தது.

கபில்தேவுடன் ஐஸ்வர்யா

kapil-dev-aishwarya
kapil-dev-aishwarya

தற்போது இந்த போட்டோவை பார்க்கும் போது அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரிகிறது. அதிலும் அப்பா, பொண்ணு உறவெல்லாம் வீட்லதான். இங்க நான் ஒரு கண்டிப்பான இயக்குனர் என்று சொல்லாமல் சொல்வது போல் அந்த போட்டோ அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் கபில்தேவுடன் இருக்கும் போட்டோவும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த புகைப்படங்கள் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Also read: ரஜினியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஐஸ்வர்யா.. லால் சலாமில் நடந்துள்ள தரமான சம்பவம்

Trending News