புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லேடி சூப்பர் ஸ்டார் கேரியரில் ஜெயித்துக் காட்டிய 10 படங்கள்.. திரை உலகமே மிரள வைக்கும் IMDB ரேட்டிங்

Nayanthara: சினிமாவில் ஒரு ஹீரோயின் பொதுவாக நான்கு ஐந்து வருடங்கள் தாண்டுவதே பெரிய விஷயம். அதற்கு முன்பே அவர்களின் மார்க்கெட் காலி ஆகிவிடும். ஆனால் இதையெல்லாம் அடித்து நொறுக்கி விட்டு தற்போது வரை டாப்பில் இருக்கும் நடிகை நயன்தாரா. இவரின் அட்டகாசமா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் அதிக அளவு IMDB ரேட்டிங் பெற்றறு என்ன என்பதை பார்ப்போம்.

சுமார் 18 வருடங்களாக சினிமாவையே லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஆதிக்கம் செய்து வருகிறார். எந்த ஒரு கதாநாயகி வந்தாலும் இவருக்கு ஈடு கொடுக்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு வெறித்தனமான நடிப்பில் ஹீரோக்கள் போல தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். ஹீரோக்கள் இல்லாமலேயே படங்கள் நடித்து அதில் வெற்றி கனியும் பறித்திருக்கிறார்.

Also Read:விஜய்யின் அப்பாவால் லியோவுக்கு வந்த ஆபத்து.. ஜெயிலர் வசூலை முறியடிக்க வாய்ப்பே இல்ல

சினிமாவில் இருந்தாலே சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கவே முடியாது. அதில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், அனைத்தையும் தவிடு பொடி ஆக்கிவிட்டு இன்றைக்கும் முதன்மை நடிகையாக சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அனைத்துக்கும் இவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே காரணம்.

இவர் தமிழ் திரையுலகில் ஐயா படத்தில் சாதுவாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே இவ்வளவு அழகாக இருக்கும் ஹீரோயின் யாருடா என்ன வியக்கும் அளவுக்கு நடித்திருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடித்தது அமோக வரவேற்பை பெற்றார். தொட்டதெல்லாம் துலங்கும் ன்னு சொல்ற மாதிரி இவருக்கு ஆரம்பமே நல்ல அமோகமா இருந்தது.

Also Read:இரட்டை சவாரி செய்ய நினைத்த நடிகர்.. ரிலேஷன்ஷிப்பில் இருந்த போதே குடும்ப நடிகைக்கு வீசிய வலை

ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அதை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டு லேடீஸ் சூப்பர் ஸ்டார் ஆக வளரும் அளவிற்கு முன்னேறினர். தற்போது வரை IMDB ரேட்டிங்கில் முதலில் தனி ஒருவன் 8.6 புள்ளிகளுடனும், இரண்டாவதாக சூப்பர் என்கிற கன்னட படம் 8.1, மூன்றாவதாக ஜவான் 7.9 உடன், அறம் 7.7 ரேட்டிங்கும், ராஜா ராணி 7.6 ரேட்டிங்கும் கிடைத்து டாப் 5 இடங்களில் உள்ளது.

பிறகு ஆறிலிருந்து பத்துக்குள் இருக்கும் திரைப்படங்கள் மாயா 7.5 ரேட்டிங்கும், மனசீக்கரோ மலையாள திரைப்படம் 7.5 ரேட்டிங்குடன் ஏழாவது இடத்திலும், கஜினி 7.5 ரேட்டிங் உடன் எட்டாவது இடத்திலும், கோலமாவு கோகிலா 7.3 ரேட்டிங் உடன் ஒன்பதாவது இடத்திலும், பில்லா 7.3 ரேட்டிங் உடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறது.

Also Read:விஜய் ஆண்டனியை வளர்த்து விட்ட 5 படங்கள்.. அம்மாவுக்காக பிச்சைக்காரனாக மாறிய கோடீஸ்வரன்

Trending News