வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

22 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரை சந்தித்த லைலா.. இந்த ஜோடி நல்ல ஜோடி தான்

கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லைலா முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சீக்கிரம் பிரபலமடைந்தவர் அதன்பிறகு லைலா கடந்த 2006ஆம் ஆண்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், அவர் தற்போது சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது லைலா 22 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்தை சந்தித்துள்ளார்.

லைலா-பிரசாந்த் இருவரும் நடித்திருந்த ‘பார்த்தேன் ரசித்தேன்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை பதிவிட்டு பிரசாந்த் சந்தித்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் இணைந்து பிரசாந்த் நடிக்க உள்ள புதிய படத்திலும் நடிக்க இருப்பதாக கூறி வருகின்றனர்.

தற்போது கடைசியாக  பிரசாந்த் புது முயற்சியாக பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு ஆயூஷ்மான் குரானா, தபு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அந்தாதுன் படத்தை தமிழில் தியாகராஜன் இயக்க, கதாநாயகனாக பிரசாந்த் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்.

அந்தகன் படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படமானது கூடிய விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு பிறகு பிரசாந்த் ஏராளமான படங்களில் நடித்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

அதற்கேற்றார்போல் வெள்ளித்திரையிலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் மற்றும் லைலா இருவரும் ஜோடியாக நடிப்பதால் ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என பலரும் கூறுகின்றனர்.

Trending News