Simran: நடிகை லைலாவால் தான் சிம்ரன் என்ற ஒரு அழகு பதுமை தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இளைஞர்களை கிரங்கடித்தவர் தான் சிம்ரன்.
சிம்ரனின் உடலமைப்பு மற்றும் நடனமாடும் திறன் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. சிம்ரன் நடிகர் பிரபுதேவா நடித்த விஐபி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.
சிம்ரன் அறிமுகமாக காரணமாக இருந்தது நடிகை லைலா தான். விஐபி படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது லைலா தான்.
தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்
இந்த படத்தை தயாரித்தது கலைப்புலி தாணு. பட பூஜைக்கு வந்த லைலா கலைக்குழு தாணு தன்னை நேரில் பார்க்க வரவில்லை என கோபப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து ப்ரொடக்ஷனிலும் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் எதற்காக ஒரு நடிகையை தேடி போய் பார்க்க வேண்டும் என்று கலைப்புலி தாணுவுக்கு கோபம் வந்திருக்கிறது.
இதனால் லைலாவை படத்தில் இருந்து தூக்கி விட்டாராம். அந்த இடத்தை நிரப்பியவர் தான் பின்னாளில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக கனவு கன்னியாக இருந்த சிம்ரன்.