வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாரதிக்கு கிடைத்த புது உறவு.. டிஆர்பியை குறிவைத்து பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடரில் தற்போது லட்சுமிக்கு தன்னுடைய அப்பா பாரதி என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் குடும்பத்துடன் இருக்க வேண்டும், அவர் வீட்டிற்கு போக வேண்டுமென என்ற ஆசையில் ஹேமா உடன் சேர்ந்து பாரதி வீட்டிற்கு செல்கிறார்.

பாரதி குடும்பத்தில் எல்லோரும் லட்சுமியின் வருகை பார்த்து சந்தோஷப் படுகிறார்கள். அப்போது லட்சுமி, அகிலன் மற்றும் அஞ்சலியை சித்தி, சித்தப்பா என குறிப்பிடுகிறார். மேலும் இனிமேல் நான் இப்படி தான் எல்லாரையும் கூப்பிடுவேன் என லட்சுமி செல்வதைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அப்போது பாரதி வர ஹேமா அப்பா என்ன ஓடிப்போய் அவருடன் கொஞ்சுகிறாள். அதைப்பார்த்த லட்சுமி தானும் அப்பாவுடன் இதுபோன்ற செய்ய முடியவில்லையே என கலங்குகிறாள். அதன்பிறகு, சௌந்தர்யாவிடம் பாரதி நீங்க தான லட்சுமியை கூட்டிட்டு வந்தீங்க, இதெல்லாம் உங்களோட பிளான் தானே என கேட்கிறார்.

உடனே சௌந்தர்யா உன்னோட புத்தி ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கா அவ படிக்கணும் தான் வந்து இருக்கா என கூறுகிறார். அதன்பிறகு வெண்பாவிற்கு ஒரு ஃபோன்கால் வருகிறது. அந்த போன்காலை பார்த்து வெண்பா பயப்படுகிறார். பின்பு வெண்பா பயப்பட்ட அந்த ஃபோன்காலை எடுக்காமலேயே உள்ளார்.

அதன்பிறகு பாரதி, லட்சுமி, ஹேமா மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஹேமா எங்க அம்மாவை சமையல் அம்மானு கூப்பிடுற மாதிரி நானும் உங்கள டாக்டர் அப்பானு தான் கூப்பிடுவேன் என லட்சுமி கூறுகிறாள். அதை ஒளிந்திருந்து பார்த்து சௌந்தர்யா மகிழ்கிறாள்.

லட்சுமி அங்கு என்ன பண்ணுகிறாள் என்ற கவலையில் கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் செய்கிறார். அங்கு நடந்தவற்றை எல்லாம் கேட்டு கண்ணம்மா குழம்பிப் போயுள்ளார். ஒருவேளை லட்சுமிக்கு ஏதாவது உண்மை தெரிந்து இருக்குமோ என எண்ணுகிறாள். இந்நிலையில் உண்மை தெரிந்த லட்சுமி பாரதி குடும்பத்துடன் மிக நெருக்கமாக பழகுகிறாள்.

Trending News