பாரதிகண்ணம்மா தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் பாரதி தன் தந்தை என தெரிந்த லட்சுமி எப்போதும் அவருடைய இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறாள். நேற்றைய எபிசோடில் ஹேமா தன் தந்தை பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் கேட்கிறார்.
அப்போது லக்ஷ்மி அந்த இடத்திற்கு வந்ததால் ஹேமா மீண்டும் அதைப் பற்றி பேசவில்லை. ஏனென்றால் முன்பு ஒருமுறை லட்சுமியிடம் ஹேமா இதைப்பற்றி பேச மிகுந்த கோபமடைந்தாள் லட்சுமி. இந்நிலையில் கண்ணம்மா இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் சௌந்தர்யாவிற்கு போன் செய்கிறார்.
சௌந்தர்யா, லட்சுமியால் தான் ஏதோ ஒரு பிரச்சனை என நினைக்கிறார். ஆனால் கண்ணம்மா லட்சுமி ஆல் எந்த பிரச்சினையும் இல்லை ஹேமாவால் அதான் பிரச்சினை என கூறுகிறார். எனக்கும் என் புருசனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாள் உங்க பேத்தி என கண்ணம்மா கூறுகிறாள்.
இந்நிலையில் சௌந்தர்யா இது உன்கிட்டே கேட்டு விட்டாலென்ன மனதுக்குள்ளேயே நினைத்துக் கொள்கிறார். மறுபக்கம் லட்சுமி, ஹேமாவுடன் பாரதி வீட்டுக்கு செல்ல ஆசைப்படுகிறாள். ஆனால் கண்ணம்மா அதை எவ்வளவு தடுக்க முயற்சித்தும் லட்சுமி விடாப்பிடியாக ஹேமா வீட்டுக்கு செல்வேன் என்று உறுதியாக உள்ளார்.
இதனால் கண்ணம்மாவும் வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார். ஆனால் லட்சுமியால் அங்கு ஏதும் பிரச்சனை வருமா, உண்மை தெரிந்தால் லட்சுமி என்ன ஆவாள் என கண்ணம்மா இங்கு பரிதவித்துக் கொண்டு இருக்கிறாள். லட்சுமி தனது அப்பா பாரதி எனத் தெரிந்தும் தற்போது வரை டாக்டர் அங்கிள் என்றே கூப்பிட்டு வருகிறாள்.
தனது பாசத்தை உள்ளுக்குள்ளேயே வைத்து தவிக்கும் லட்சுமிக்கு தன் அம்மா கண்ணம்மாவை சந்தேகப்பட்டு தான் பாரதி ஒதுக்கி வைத்திருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்தால் பாரதியை தூக்கி எறியவும் லட்சுமி தயங்கமாட்டாள். இதனால் பாரதி கண்ணம்மா தொடரில் பல டுவிஸ்டுகள் வரக் காத்திருக்கிறது.