திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதலுக்கே மோசமான லால் சலாம், டஃப் கொடுக்கும் லவ்வர்.. 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Lal Salaam- Lover 3rd Day Collection: கடந்த வாரம் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. அப்படத்துடன் மணிகண்டனின் லவ்வர் படமும் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

பொதுவாக சூப்பர் ஸ்டார் படம் வரும்போது எந்த படங்களும் வெளிவராது. ஆனால் லவ்வர் வெளியானது ஒரு சிறு ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதன்படி மத நல்லிணக்கத்தை பற்றி கிளாஸ் எடுத்த லால் சலாம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை.

ஆனால் காதலை மையப்படுத்தி வெளிவந்த லவ்வர் நாளுக்கு நாள் வசூலில் ஏறுமுகமாக இருக்கிறது. அந்த வகையில் லால் சலாம் முதல் நாளில் ஐந்து கோடியை நெருங்கி இருந்தது. ஆனால் இரண்டாவது நாளை பொறுத்தவரையில் மூன்று கோடி தான் கலெக்ஷன் ஆகி இருந்தது.

Also read: ரஜினி ஒரு சங்கின்னு பச்சையா தெரியுது.. தலைவரை போட்டு பொளந்த ப்ளூ சட்டை

எப்படியும் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று வசூல் தாறுமாறாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் அதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் நேற்று வெறும் 3 கோடி தான் வசூல் ஆகி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த மூன்று நாட்களில் லால் சலாம் படத்தின் வசூல் 11 கோடியை மட்டுமே நெருங்கி இருக்கிறது.

கிட்டதட்ட 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 100 கோடி வசூலிக்கும் என ரிலீஸுக்கு முன்பே கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆனால் படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக இருந்த நிலையில் தற்போது முதலுக்கே மோசம் என்ற நிலையில் இருக்கிறது லால் சலாம்.

ஆனால் லவ்வர் முதல் நாளில் ஒரு கோடியும் இரண்டாவது நாளில் 1.5 கோடியும் மூன்றாவது நாளில் 2 கோடியை நெருங்கியும் வசூல் வேட்டையை நிகழ்த்தி இருக்கிறது. காதலர் தின ஸ்பெஷலாக இருக்கும் இப்படம் இந்த வாரமும் அதிக அளவில் கல்லாக கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: லால் சலாமுக்கு தண்ணி காட்டும் லவ்வர்.. 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Trending News