வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லைக்கா தலையில் துண்டை போட்ட லால் சலாம்.. ஸ்கோர் செய்த லவ்வர், 4ம் நாள் வசூல் நிலவரம்

Lal Salaam And Lover 4th Day Collection: கடந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம், பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் ஆகிய படங்கள் வெளிவந்தது. இதில் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் கேஸ்ட் ரோலில் நடித்திருந்தது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதை வைத்து பட குழுவும் பயங்கர பிரமோஷன் எல்லாம் செய்தார்கள். ஆனால் தற்போதைய நிலவரப்படி லால்சலாம் படத்தால் லைக்கா தலையில் துண்டை போடும் நிலைக்கு வந்திருக்கிறது. அந்த வகையில் லால் சலாம் படத்தின் வசூல் முதல் நாள் ஐந்து கோடியை நெருங்கி இருந்தது.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதன் வசூல் குறைய தொடங்கி நான்காவது நாளான நேற்று வெறும் ஒரு கோடி மட்டுமே வசூல் ஆகி இருந்தது. இதை வைத்து பார்க்கும் போது இதுவரை லால் சலாம் 12 கோடிகளை மட்டுமே நெருங்கி இருக்கிறது. ஆனால் இதற்கு போட்டியாக வெளிவந்த லவ்வர் பட வசூல் லாபகரமாகவே இருக்கிறது.

Also read: லால் சலாமுக்கு தண்ணி காட்டும் லவ்வர்.. 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

ஜெய் பீம், குட் நைட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த மணிகண்டனுக்கு இந்த லவ்வர் ராசியாக அமைந்திருக்கிறது. அதன்படி முதல் நாளில் ஒரு கோடியை வசூலித்திருந்த இப்படம் நான்கு நாள் முடிவில் 3.5 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது.

மேலும் படத்திற்கான விமர்சனமும் நன்றாக வந்து கொண்டிருப்பதால் இந்த காதலர் தினத்திற்கு ஏற்ற படமாக லவ்வர் இருக்கிறது. ஆனால் லால் சலாம் படத்தின் விமர்சனங்கள் நெகட்டிவ் ஆக தான் இருக்கிறது. சூப்பர் ஸ்டாருக்கான மாஸ் இல்லை என்று புலம்பும் ரசிகர்கள் தலைவரை என்ன பண்ணி வச்சிருக்கீங்க என ஆதங்கத்துடன் கேட்டு வருகின்றனர்.

ஆக மொத்தம் சூப்பர் ஸ்டாரை வைத்து கல்லா கட்டலாம் என்று நினைத்த லைக்காவுக்கு இது பலத்த அடியாக தான் இருக்கிறது. மேலும் அப்பா துணையோடு வெற்றி பெறலாம் என நினைத்த ஐஸ்வர்யாவுக்கும் இது பெரும் அதிர்ச்சியாக மாறி இருக்கிறது.

Also read: முதலுக்கே மோசமான லால் சலாம், டஃப் கொடுக்கும் லவ்வர்.. 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Trending News