வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தொப்பி வாப்பாவாக மாறிய சூப்பர் ஸ்டார்.. லால் சலாம் போஸ்டரை பங்கம் செய்த நெட்டிசன்கள்

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால் அவர் என்ன கெட்டப்பில் நடிக்கிறார் என்ற தகவல் அடங்கிய போஸ்டர் நேற்று நள்ளிரவில் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இந்த கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் சரமாரியாக பங்கம் செய்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் தமிழகத்தில் சுமார் 15 கிளை நிறுவனங்களை வைத்திருக்கும் தொப்பி வாப்பா பிரியாணி கடையின் லோகோவில் இருக்கும் பொம்மையின் கெட்டப் தான் அப்படியே சூப்பர் ஸ்டாருக்கு ஐஸ்வர்யா கொடுத்திருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

Also Read: சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கூட இருந்தவங்களே குழி பறிச்சா எப்படி?

அப்படி என்ன சூப்பர் ஸ்டார் மேல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோபம். தன்னுடைய தந்தையை இப்படி பிரியாணி கடை மாஸ்டர் ஆக்கிட்டாங்களே! என்றும் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளுகின்றனர். மேலும் லால் சலாம் படப்பிடிப்பிற்காக ரஜினி தற்போது மும்பை சென்றுள்ளார்.

மும்பையில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினி ‘மொய்தீன் பாய்’ என்ற கெட்டப்பில் நடிப்பதாக படக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த போஸ்டரில் ‘சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாக’ என இஸ்லாமியர்கள் வணக்கம் தெரிவிக்கும் வசனமும் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் ரஜினி சிவப்பு நிற தொப்பி, லேசான தாடி, கூலர்ஸ் என கம்பீரமாக நடைபோடுகிறார்.

Also Read: ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் தனுஷ், ஐஸ்வர்யா.. கரும்பு மிஷினில் மாட்டிய கதையான நடிகரின் நிலை

மேலும் ரஜினி தற்போது ஜெயிலர் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கிய இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுவதாக அந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாரின் லுக் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்படுகிறது.

மேலும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீட் கேரக்டரில் நடிக்கின்றனர். இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இருப்பினும் லால் சலாம் படத்தில் ரஜினியின் லுக் அப்படியே தொப்பி வாப்பா போலவே இருப்பதால் லால் சலாம் போஸ்டரை சோசியல் மீடியாவில் பயங்கரமாக கலாய்கின்றனர்.

தொப்பி வாப்பாவாக மாறிய சூப்பர் ஸ்டார்

rajini-look-cinemapettai
rajini-look-cinemapettai

Also Read: எதிரிக்கு எதிரி நண்பன்.. தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா எனிமியிடம் காட்டும் நெருக்கம்

Trending News