வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோவையும், விஜய்யையும் காப்பாற்ற லலித் செய்த மோசடி.. மொத்த கூட்டத்திற்கும் வைத்த ஆப்பு

Leo-Vijay: விஜய், லோகேஷ் கூட்டணி எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததோ அதே அளவுக்கு இப்போது சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. கடந்த வாரம் வெளிவந்த லியோ முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்களை பெற தொடங்கிய நிலையில் இப்போது அடுத்தடுத்த பிரச்சனைகளும் படத்திற்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கிறது.

அதில் முதலாவதாக இருக்கும் விஷயம் பாக்ஸ் ஆபிஸில் நடக்கும் மோசடி தான். தயாரிப்பாளரே சொந்த காசை போட்டு டிக்கெட் புக் செய்து படத்திற்கு கூட்டம் வருவது போல் காண்பிக்கிறார் என வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியும் இப்போது நெகட்டிவ் விஷயங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அதாவது லியோ மூலம் கிடைக்கும் லாபத்தில் தியேடர்களுக்கு 20% தான் கொடுக்கப்படும் என தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. ஆனால் இது எப்படி எங்களுக்கு கட்டுப்படியாகும் என பல உரிமையாளர்கள் வெளிப்படையாகவே புலம்பினர். அதில் சென்னையை தாண்டிய மற்ற நகரங்களின் சில தியேட்டர்களில் லியோவை திரையிட மாட்டோம் என்று பகிரங்கமாக சிலர் பேட்டியளித்ததையும் நாம் பார்த்தோம்.

இந்த சூழலில் திரையரங்கு சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தொடர்ந்து கொடுத்து வரும் பேட்டிகளும் பரபரப்பை கிளப்பி வருகிறது. அதைத்தொடர்ந்து மொத்த தியேட்டர் உரிமையாளர்களும் நேற்று சென்னையை நோக்கி படையெடுத்து வந்திருக்கின்றனர். எப்படியாவது இந்த 20 சதவீத பிரச்சனையை பேசி முடித்து விட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

ஆனால் திடீரென அந்த மீட்டிங் கேன்சல் செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்தக் கூட்டம் நடந்து விஷயம் மீடியாக்களுக்கு தெரிந்தால் விஜய் மற்றும் லியோ படத்திற்கு இது மிகப்பெரும் பாதிப்பாக இருக்கும் ஏற்கனவே இருக்கும் பிரச்சனை போதாது என்று இது வேற பூதாகரமாக கிளம்பி விடும் என்ற எண்ணத்தில் லலித் சில முக்கிய புள்ளிகளை வைத்து இப்படி ஒரு வேலையை செய்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து தீபாவளிக்கு பிறகு இந்த சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதை ஏற்க முடியாத தியேட்டர் அதிபர்கள் இப்போது கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். சமயம் பார்த்து இதற்கு ஒரு செக் வைக்க வேண்டும் என்ற ஆவேசத்திலும் அவர்கள் உள்ளனர். அந்த வகையில் லலித் செய்த இந்த விஷயம் மற்றும் ஒரு பரபரப்புக்கு காரணமாகி இருக்கிறது.

 

Trending News