வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்சேதுபதிக்கு அல்வா கொடுத்த லலித்.. எச் வினோத்தை பார்சல் செய்து அனுப்பியதன் பின்னணி

விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் உரிமையை விஜய் தயாரிப்பாளர் லலிதை வாண்டட் ஆக கூப்பிட்ட ஒப்படைத்துள்ளார்.

மேலும் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தை உதயநிதி வெளியிடுவதால் இந்த படத்திற்கு தான் அதிகப்படியான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வாரிசு மற்றும் துணிவு படம் ஒரே நாளில் வெளியாகியுள்ளதால் அதிக வசூலை எந்த படம் பெரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

Also Read :250 கோடி, 300 கோடி கதையெல்லாம் சும்மாவா.. உள்ளூரில் வியாபாரம் ஆகாத தளபதியின் வாரிசு

இந்நிலையில் வாரிசு படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ், லலித் கூட்டணிகள் தளபதி 67 படம் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தை லலித் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. அதாவது லலித் இப்போது வினோத்தை கழட்டி விட்டுள்ளார். அதாவது இப்போது வாரிசு படத்தை லலித் வெளியிடுவதாலும், அதன் பிறகு தளபதி 67 படத்தை 250 கோடி பட்ஜெட்டில் எடுப்பதாலும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளார்.

Also Read :பஞ்ச் டயலாக்கால் மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவரும் வாரிசு VS துணிவு

ஆகையால் வினோத்தை அழைத்து விஜய் சேதுபதியின் படத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம், நீங்கள் கமலின் படத்தை முடித்துவிட்டு வாருங்கள் என அவருக்கு லலித் டாட்டா காட்டி உள்ளார். இதனால் வேறு வழி இல்லாமல் வினோத் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார்.

இதன் மூலம் விஜய் சேதுபதிக்கும் லலித் அல்வா கொடுத்துள்ளார். தற்போது வினோத் மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணி தள்ளிப் போய் உள்ளது. ஆகையால் வினோத் அடுத்ததாக கமலின் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read :புது அவதாரம் எடுத்து அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி.. தனுஷ், சிவகார்த்திகேயன் போல செய்யபோகும் வேலை

Trending News