தளபதி விஜய்யை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரித்து, கல்லா கட்டி வந்த தயாரிப்பாளர் லலித்குமார், விஜய் அரசியல் களத்தில் குதித்துள்ளதால், தன் வாரிசை ஹீரோவாக்க முடிவெடுத்துள்ளார். இதுதான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் டாக் ஆகப் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் நூற்றுக்கணக்கான படங்களும் வாரம்தோறும் தவறாமல் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ரிலீஸாகி வருகின்றன. அதேபோல், முக்கிய பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களையும் முன்னிட்டு பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸாகின்றன.
ஒரு படம் சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் அதை லாபம் நட்டம் தயாரிப்பாளரையே சேரும்! அதனால் போட்ட முதல் பணத்தை எடுக்க பல்வேறு கஷ்டங்களையும் அவர் சந்திக்க நேரிடும்!
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிப்படும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனரும் பிரபல தயாரிப்பாளாருமான லலித்குமார். இவர், லோகேஷ் கனகராஜ்- தளபதி விஜயின் காம்போவில் உருவான மாஸ்டர் மற்றும் லியோ படங்களை தயாரித்திருந்தார். அதேபோல், விக்ரமின் கோப்ரா, காத்து வாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார். தற்போது, விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதன் காம்போவில் உருவாகி வரும் LIK என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
விஜயின் ஆஸ்தான தயாரிப்பாளரும், டாப் நடிகர்களை வைத்து படமெடுத்தவருமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித்குமார் இதுவரை எடுத்த படங்களில் போட்ட முதலை எடுத்தாரோ என்னவோ, இப்போது அதிரடி முடிவொன்றை எடுத்திருக்கிறார். அதாவது தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகிறார். அதன்படி, கவுதம் மேனனை அணுகியுள்ளார்.
கவுதம் மேனன் தனக்கு சம்பளமாக ரூ.5 கோடி கேட்ட நிலையில் அவருக்கான சம்பளத்தை படம் முடித்த பின் தருவதாகக் கூறவே அதை ஏற்க கவுதம் மேனன் மறுத்துவிட்டதாகவும், இதையடுத்து, லிங்குசாமியை அணுகியதாகவும் அவரும் ஏற்கனவே பெரிய புராஜக்டில் ஈடுபட்டுள்ளதால் அவரும் மறுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர், ஒரு புதிய இயக்குனரிடம் கதை கேட்டு, அதை ஓகே செய்த லலித்குமார், தற்போது அலுவலகம் போட்டு, இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். தன் மகனை முன்னணி ஹீரோவாக உருவாக்க இப்படத்திற்கு ரூ.50 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லியோ திரைப்படத் தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் திருமணம் கடந்தாண்டு நவம்பர் 23 ஆம் தேதி சென்னையில் விமரிசையாக நடந்தபோது, நடிகரும் தவெக கட்சித் தலைவருமான விஜய் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.