செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எகிறிப்போன லால் சலாம் பட்ஜெட்.. மகள் படம் என்று பாராமல் சம்பளத்தில் இலாப கணக்கு தீட்டிய ரஜினி

Actor Rajinikanth: ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்த படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் நடிக்கப் போகிறார். அடுத்ததாக இவருடைய நீண்ட நாள் ஆசையாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் உடனும் தலைவர் 171 படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.

இதற்கிடையில் இவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற லால் சலாம் படத்தில் மொகைதீன் பாய் கதாபாத்திரத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரம் மற்றும் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார்கள்.

Also read: சஞ்சயை வைத்து அப்பனுக்கு பாடம் சொல்லும் சங்கீதா.. லதா ரஜினிகாந்த் போல் காட்டும் புத்திசாலித்தனம்

இப்படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் ரிலீஸ் செய்வதற்கான பின்னணி வேலைகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனமான சுபாஸ்கரன் தான் தயாரித்திருக்கிறார். மேலும் வழக்கம்போல் இப்படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்த் ஆரம்பத்தில் இப்படத்தில் இருந்து லாபத்தை கேட்டிருக்கிறார்.

அதன் பின் போகப் போக லாபம் எனக்கு வேண்டாம் அதற்கு பதிலாக சம்பளம் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்றால் இந்த படத்தை தயாரிப்பதற்காக முதலில் போடப்பட்ட பட்ஜெட் 25 கோடிகள் தான். ஆனால் இவருடைய மகள் ரொம்பவே அதிக செலவை இழுத்து விட்டு போட்ட பட்ஜெட்டையும் தாண்டி 50 கோடிகள் ஆக அதிகரித்து விட்டது.

Also read: ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு

இதை தெரிந்த ரஜினி ஏற்கனவே மகள் இப்படி செய்து விட்டால், நாமளும் அதில் லாபம் கேட்பது சரியாய் இருக்காது என்று புரிந்து கொண்டார். அதனால் ரஜினி சில நிமிடங்களில் மட்டும் நடித்த கௌரவத் தோற்றத்திற்காக சம்பளமாய் 40 கோடி மட்டும் கொடுத்தால் போதும் என்று கேட்டிருக்கிறார்.

ஆனாலும் தன் மகள் இயக்கிய படத்திற்கு இந்த அளவிற்கு கணக்கு பார்த்து தனக்கு சேர வேண்டிய லாபத்தை கராராக பேசி எப்படியோ சம்பளத்தை ரஜினி வாங்கிவிட்டார். இந்த அளவுக்கு காரராக இருக்கப் போய் தான் சம்பளத்திலும், சூப்பர் ஸ்டார் பட்டத்திலும் முதலிடத்தில் இருக்க முடிகிறது.

Also read: ரஜினி, லோகேஷுக்கு கொடுக்கும் தலைவலி.. சன் பிக்சர்ஸ்-சை விட இவர் தொல்லை தாங்க முடியல

Trending News