சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்த வாரம் வெளியான 6 படங்கள்.. அழுத்தமான கதைக்களத்துடன் வந்திருக்கும் ஆதார் படம்

இந்த வாரம் வெள்ளிக்கிழமை மொத்தம் ஆறு படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. நெகடிவ், பாசிட்டிவ் என பல கலவையான விமர்சனங்களை இந்த படங்கள் பெற்றிருக்கின்றன. அதர்வா நடித்த ட்ரிகர், கருணாஸ் – ரித்விகா நடித்த ஆதார் படங்களும் இந்த வாரம் தான் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

ட்ரிகர்: கூர்க்கா, டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கிய படம் ட்ரிகர். இந்த படத்தில் அதர்வா உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன், சீதா, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் நடித்துள்ளனர். வழக்கம் போல காவல் துறையினரால் டிஸ்மிஸ் செய்யப்படும் ஹீரோ மறைமுகமாக குற்றங்களை கண்டு பிடிக்கும் பழைய கதை.

டிராமா: அஜூ கிழுமலா இயக்கத்தில் கிஷோர், சார்லி, ஜெய் பாலா, காவ்யா பெல்லு நடித்த படம் டிராமா . சஸ்பென்ஸ், த்ரில்லர் நிறைந்த திரைப்படம் இது.

Also Read: வெற்றியை தொலைத்து இப்போது புலம்பி என்ன பிரயோஜனம்.. உச்சகட்ட விரக்தியில் அதர்வா

ஆதார்: இந்த வாரம் ரிலீசான படங்களில் ரசிகர்களின் மனதில் ஆழமாக நின்ற படம் என்றால் அது ஆதார். கருணாஸ், இனியா, ரித்விகா, உமா ரியாஸ், அருண் பாண்டியன் என நடிப்பில் தேர்ந்த நட்சத்திரங்களை வைத்து இயக்குனர் இப்படி ஒரு அழுத்தமான கதையை கொடுத்திருக்கிறார்.

பபூன்: இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இந்த படத்தை இயக்கியுள்ளது. வைபவ், ஆந்தங்குடி இளையராஜா, ஜெய பாலன், நரேன் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். நாட்டுப்புற கலைஞர்களின் நிலை, இலங்கை அகதிகள், அரசியலை பற்றி பேச இப்படம் முற்பட்டு இருக்கிறது.

Also Read: வைபவ் நடித்து ஹிட்டான 5 படங்கள்.. தனியா நின்னா மனுஷன் ஜெயிக்க முடியாது போல

ரெண்டகம்: தமிழிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் திரைப்படம் ரெண்டகம். இந்த படத்தில் அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராஃப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன் நடிக்க , இயக்குனர் ஃபெலினி டி.பி இயக்கியுள்ளார்.

குழலி: ‘காக்கா முட்டை’ பட விக்னேஷ் முதன் முதலாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் குழலி. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு கிராமிய படமாக இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. சாதி சார்ந்த பிரச்சனைகளை இந்த படத்தில் எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.

Also Read: காக்கா முட்டை படத்தில் நடித்த பெரிய காக்கா முட்டையா இது! ஹீரோவையே மிஞ்சி விடுவார் போல

Trending News