புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விடுதலைக்காக காத்திருந்த சூரி.. கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றிய விஜய் சேதுபதி

பல திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து நம்மை சிரிக்க வைத்த சூரி தற்போது விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சூரிதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

க்ரைம், த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் இப்போது அங்கு தான் ஒரு பெரிய ட்விஸ்ட் நடந்திருக்கிறது.

என்னவென்றால் இந்தப் படத்தின் ஆரம்பத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் சிறுது நேரம் வருவதுபோல் தான் உருவாக்கப்பட்டது. அதற்காகத்தான் அவரிடமிருந்து கால்ஷீட்டும் பெறப்பட்டது. ஆனால் இப்பொழுது அவரின் கேரக்டர் சற்று அதிகப்படுத்தபட்டு முழு முக்கிய கதாபாத்திரமாக மாறி இருக்கிறது.

சொல்லப்போனால் சூரியின் கேரக்டரை விட விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் ரொம்பவும் பவர்புல்லாக காட்டப்பட இருக்கிறதாம். தற்போது வெற்றிமாறன் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இருந்து வருகிறார்.

அதில் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. மேலும் அவரின் தேதிகளுக்காக வெற்றிமாறன் காத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் சூரியின் படமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது விஜய் சேதுபதியின் படமாக மாறியிருக்கிறது.

மேலும் ஹீரோ என்று நம்பி நடிக்க வந்த இந்த கதையில் கடைசிநேர ட்விஸ்ட்டாக விஜய் சேதுபதி மொத்த ஆட்டத்தையும் மாற்றி விட்டாரே என்று சூரி கவலையில் இருக்கிறாராம். இருந்தாலும் இந்தப் படம் தன்னை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையிலும் அவர் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News