25 வருஷம் 96 கொலைகள்.. தலை சுற்ற வைத்த பயமறியா பிரம்மை, முழு விமர்சனம்

Bayamariya Brammai Movie review: இப்போது எல்லாம் இயக்குனர்கள் வித்தியாசமான கதை களத்தால் ஆடியன்ஸை கவர ஆரம்பித்துள்ளனர். ஆனால் அவை அனைத்தும் ஒர்க் அவுட் ஆகிறதா என்று கேட்டால் நிச்சயம் கேள்வி குறிதான்.

அப்படி ஒரு சோதனை முயற்சியில் வெளிவந்திருக்கும் படம் தான் பயமறியா பிரம்மை. ராகுல் கபாலி இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், ஜே.டி, வினோத் சாகர், சாய் பிரியங்கா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதைப்படி சாகித்ய அகாடமி பெற்ற எழுத்தாளரான வினோத் சாகர் 25 ஆண்டுகளில் 96 கொலைகள் செய்திருக்கும் ஜே.டி யை சந்தித்து அவரின் வாழ்க்கையை கதையாக எழுதுகிறார்.

சோதனை முயற்சி

அப்போது சிறையில் ஜேடி தான் செய்த கொலைகளை கலை என்ற பார்வையில் விளக்குகிறார். எதற்காக இவர் இத்தனை கொலைகளை செய்தார்? அதன் பின்னணி என்ன? இதை கதையாக எழுதும் எழுத்தாளரின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகளுக்கு இப்படம் விடையளிக்கிறது.

பொதுவாக இந்த மாதிரி கதையில் கொலை சம்பவங்களை ஃபிளாஷ்பேக்காக காண்பித்து இருப்பார்கள். ஆனால் இதில் கதை புத்தகமாக வெளி வருகிறது. அதை படிக்கும் வாசகர்கள் தன்னை அந்த கொலைகாரனாக நினைத்துக் கொள்கிறார்கள்.

அந்தக் கோணத்தில் தான் கதை நகர்கிறது. அதனாலேயே படம் பார்ப்பவர்களுக்கு இது பெரும் குழப்பத்தை கொடுக்கிறது. பல இடங்களில் தெளிவில்லாமல் நகரும் கதை நம்மை ரொம்பவும் சோர்வடைய வைத்து விடுகிறது.

பல காட்சிகள் அங்கங்கே தனியாக தொங்கி நிற்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது. இதுவே படத்தின் மிகப்பெரும் பலவீனமாக இருக்கிறது. பலம் என்று பார்க்கையில் குரு சோமசுந்தரம் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதேபோல் பின்னணி இசையும் ஓகே ரகமாக உள்ளது. அதைத் தாண்டி பல இடங்களில் இயக்குனர் ரொம்பவும் சோதித்து இருக்கிறார். தூய தமிழில் பேசுவது, மெதுவாக நகரும் காட்சிகள் என படம் எப்போதும் முடியும் என தோன்ற வைக்கிறது. ஆக மொத்தம் வித்தியாசமான முயற்சியில் வெளிவந்திருக்கும் இந்த படம் சோதனையாக தான் அமைந்திருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2/5

சமீபத்தில் வெளிவந்த படங்களின் விமர்சனங்கள்

Next Story

- Advertisement -