வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கெட்ட சகவாசம், விவாகரத்தில் கபடி ஆடிய நடிகைகள்.. புலம்பி தவிக்கும் பாலா

தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் இயக்குனர் பாலாவின் விவாகரத்து பற்றி தான். இவர் தன் மனைவி முத்து மலரை சில நாட்களுக்கு முன் விவாகரத்து செய்தார். தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பால் அதிர்ச்சியில் இருந்த திரை உலகம் பாலாவின் விவாகரத்து செய்தியைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தது.

அதன் பிறகு இவரின் விவாகரத்து குறித்த பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. தற்போது இந்த விஷயத்தில் பிரபல நடிகர்களின் மனைவிகளுக்கும் சம்மந்தம் இருக்கிறது என்ற ஒரு தகவலை தயாரிப்பாளர் ராஜன் தற்போது தெரிவித்துள்ளார்.

பொதுவாக பிரபலமாக இருக்கும் இயக்குனர்களின் மனைவிகள் பிரபல நடிகைகள் மற்றும் நடிகர்களின் மனைவிகள் என்று அனைவருடனும் நட்புறவை வளர்த்துக் கொள்வார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து வெளியில் செல்வது, வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வது என்று தங்கள் பொழுதை போக்கி வருவார்கள்.

இது பாலாவின் மனைவி விஷயத்திலும் நடந்துள்ளது. அவர் ப்ரீத்தா விஜயகுமார், சினேகா, ஆர்த்தி ஜெயம் ரவி மற்றும் பிரபல நடிகர்களின் மனைவிகள் உள்ளிட்ட பலருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இவர்கள் அனைவரும் பல பார்ட்டிகள், விழாக்கள் என்று ஒன்றாக சந்தித்துக் கொள்வது வழக்கம்.

பொதுவாக நம் வீடுகளில் கணவன்கள் மனைவிகள் இடம் விளையாட்டாக உன் பிரெண்ட்ஸ் எல்லாம் ஒன்று சேர்ந்தால் நம் குடும்பத்தில் குண்டு வைத்துவிடுவார்கள் என்று கூறுவது உண்டு. இப்படிப்பட்ட விஷயம்தான் பாலாவ விவகாரத்திலும் நடந்துள்ளது. அதாவது பாலாவின் திருமணத்திற்கு முன்னர் அவரின் மனைவி முத்து மலர் பிரபல அரசியல் பிரமுகரின் மகன் ஒருவருடன் காதலில் இருந்துள்ளார்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு அதை மறந்துவிட்டு தன் குடும்ப வாழ்வில் முற்றிலுமாக அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த சமயத்தில் பாலாவின் போக்கு அவருக்குப் பிடிக்காமல் போக தன் தோழிகளான அந்த நடிகைகளிடம் அவர் புலம்பியுள்ளார். அதற்கு அவர்களும் பல யோசனைகளை கூறியுள்ளனர்.

அதை கேட்டு தான் தன் மனைவி அவருடைய பழைய காதலை புதுப்பித்து விட்டதாக பாலா தற்போது தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம். நல்லா இருந்த என் வாழ்க்கையை நாசமாக்கியதே அவர்கள் தான் என்று அவர் சம்பந்தப்பட்ட நடிகைகளை பற்றி ஆதங்கத்துடன் பேசி வருகிறாராம். இதனால்தான் சுமூகமாக முடிய வேண்டிய பிரச்சனை தற்போது விவாகரத்து வரை வந்ததாகவும் திரையுலகில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

Trending News