செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முரட்டு பையனுக்கு ஸ்டார்ட் ஆன லவ் மூடு.. ஸ்ருதி உடன் கைகோர்த்து செல்லும் லோகேஷின் வைரல் போட்டோ

Viral Photo Of Lokesh And Shruthi: சுட்டுப் போட்டாலும் எனக்கு ரொமான்ஸ் வராது. எனக்கும் ரொமான்ஸுக்கும் ரொம்ப தூரங்க என சொன்ன லோகேஷா இது? என ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் இவருடைய படங்களில் மருந்துக்கு கூட காதல் காட்சிகளோ, ரொமான்டிக் சீனா இருக்காது.

அடிதடி, வெட்டு குத்து, ரத்தம், வெடிகுண்டு, துப்பாக்கி சத்தம் தான் லோகேஷின் அடையாளம். இது இல்லாமல் அவருடைய படங்கள் வெளிவருவது கிடையாது. அப்படி இருப்பவர் தற்போது ரொமான்டிக் நாயகனாக மாறி இருக்கிறார்.

அதாவது முரட்டு பையனுக்கு இப்போது லவ் மூடு ஸ்டார்ட் ஆகி இருக்கிறது. அதை குறிப்பிடும் வகையில் தற்போது வெளியாகி இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் சுருதிஹாசனுடன் கைகோர்த்து நடப்பது போல் இருக்கிறது.

Also read: விஜய்யை வைத்து லோகேஷ்க்கு பாடம் எடுத்த SAC.. சண்டை செய்றேன்னு அவமானப்படுத்துவது நியாயமா?

ஆனால் ஃபோட்டோவில் பின்புறம் மட்டும் தான் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்த ரசிகர்கள் தற்போது இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக லோகேஷ் மற்றும் சுருதி இருவரும் இருக்கும் போட்டோ ஒன்று வெளியானது.

ஸ்ருதி உடன் கைகோர்த்து செல்லும் லோகேஷ்

lokesh-sruthi
lokesh-sruthi

அதில் இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. இதை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் புது படம் எதுவும் நடிக்க போகிறார்களா? என கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் ஸ்ருதிஹாசன் பாடி இசையமைக்கும் ஆல்பம் சாங் ஒன்றுக்காக எடுத்த போட்டோ தான் அது என தெரியவந்துள்ளது.

மேலும் அதில் லோகேஷ் நடிக்க இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் போட்டோவும் க்யூட்டாக இருக்கிறது. விரைவில் இவர்களின் ஆல்பம் பாடல் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் செய்யப் போகும் தரமான சம்பவம்.. ஆண்டவர் கிட்டயே ஆசீர்வாதம் வாங்கியாச்சு

Trending News