திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திருமணத்தில் கூட இருந்தவங்களே கேலி செஞ்சாங்க.. பதிலடி கொடுக்க 14 கிலோ உடல் எடையை குறைத்த மஞ்சிமா புகைப்படம்

Actress Manjima Mohan: நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது திருமணத்தின்போது உடன் இருந்தவர்களே மஞ்சிமா மோகனின் காது பட உருவ கேலி செய்தனர்.

2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த கௌதம் கார்த்திக்கை காதலித்து ஆசை ஆசையாய் கரம் பிடித்த மஞ்சிமா மோகனுக்கு, தன்னுடைய உடல் எடையை வைத்து கிண்டல் செய்வது சுத்தமாகவே பிடிக்கவில்லை.

Also Read: திருமணத்திற்கு தனியாக வந்த புது மாப்பிள்ளை கௌதம் கார்த்திக்.. பொண்டாட்டிய மறந்துட்டு வர இப்படி ஒரு காரணமா?

ஒரு கட்டத்தில் கௌதம் கார்த்திக்கிற்கும் அந்த எண்ணம் வந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. தன்னைக் கேலி கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் மஞ்சிமா மோகன் அதிரடியாக 14 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இப்போது சிக்குனு சிறுத்தை குட்டி போல் இருக்கும் மஞ்சிமா மோகனின் லேட்டஸ்ட் புகைப்படம் பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

அந்த அளவிற்கு இந்த புகைப்படத்தில் டாப் மற்றும் ஜீன்ஸ் உடன் தன்னுடைய இடையழகை காண்பித்திருக்கிறார். மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு பிந்தைய நேர்காணல் ஒன்றில், சமூக வலைதளங்களில் மட்டும் நான் உருவ கேலிக்கு ஆளாகவில்லை.

Also Read: 2022ல் பரபரப்பை கிளப்பிய 5 பிரபலங்களின் திருமணம்.. 7 வருட காதலில் ஜெயித்த நயன்-விக்கி ஜோடி

என்னுடைய திருமணத்தன்றும் உருவ கேலிக்கு ஆளானேன். அதை நான் பொருட்படுத்தவில்லை. எப்போது வேண்டுமானாலும் என்னுடைய உடல் எடையை என்னால் குறைக்க முடியும். எனது உடல் எடையில் நான் சௌகரியமாகவே இருக்கிறேன்.

இருப்பினும் என்னை கைநீட்டி பேசியவர்களைக் எல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமாகத்தான் இப்போது உடல் எடையை குறைத்து இருப்பதாக இந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

14 கிலோ உடல் எடையை குறைத்த மஞ்சிமா புகைப்படம்

manjima-mohan-cinemapettai
manjima-mohan-cinemapettai

Also Read: இந்த போட்டோவை பார்த்து கொஞ்சலான என் கட்டை வேகாது.. இணையத்தில் திணறடிக்கும் மஞ்சிமா மோகன் புகைப்படம்!

Trending News