Shalini-Advik Latest Photo: அஜித்தின் போட்டோ வெளியான அடுத்த நிமிஷம் சோசியல் மீடியாவே கலைக்கட்டி விடும். பட அப்டேட் வரவில்லை என்றாலும் அடுத்தடுத்து வரும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் அடைந்து வருகிறார்கள்.
அவர்களை மேலும் குஷியாக்கும் வகையில் அஜித் குடும்ப போட்டோக்கள், வீடியோக்கள் கூட அவ்வப்போது வெளியாகி ட்ரெண்ட் ஆகும். அதன் படி தற்போது குட்டி அஜித்தின் போட்டோ ஒன்று வெளியாகி அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
குட்டி அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

அஜித்தின் மகன் ஆத்விக் தன் அப்பாவை போலவே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது அவர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகும்.
Also read: அஜித்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த வாரிசு நடிகர்.. 30 வருடமாக புலம்பித் தவிக்கும் அன்பு செல்வன்
அந்த வகையில் ஆத்விக் தன் அம்மா ஷாலினியுடன் இருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது. அதில் இருவரும் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து லவ் சிம்பல் வைத்தபடி இருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் அம்மா மேல குட்டி அஜித்துக்கு அவ்வளவு லவ்வு என கமெண்ட் செய்து வருகின்றனர்.
அம்மா மேல அம்புட்டு லவ்வு

கால் பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும் ஆத்விக்குக்கு ஷாலினி சப்போர்ட் செய்து வருகிறார். அஜித் அவருடைய வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில் ஷாலினி தன் மகன் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் தவறாமல் ஆஜராகி விடுகிறார்.
Also read: புது அவதாரத்துக்கு தயாராகும் அஜித்.. அவார்ட் இயக்குனருடன் ரகசியமாக நடந்த மீட்டிங்