முதல் முறையாக ஓடிடி தொடங்கும் ஷகிலா.. எங்கிருந்து வந்தது இம்புட்டு காசு தெரியுமா.?

சினிமாவில் பல கவர்ச்சியான வேடங்களில் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷகிலா . இவர் மலையாள திரையுலகில் அறிமுகமாகி தனது கவர்ச்சியின் மூலம் பல இளைஞர்களைக் கட்டிப்போட்டவர் என்று சொல்லலாம். தமிழில் சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் மலையாள திரையுலகை தான் இவர் தன் கவர்ச்சியின் மூலம் ஆட்டிப்படைத்தார்.

இவர் தற்போது தமிழில் சிறு சிறு காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியின் பாப்புலர் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2ல் போட்டியாளர் ஆகவும் பங்கேற்றார். அதில் புகழுடன் சேர்ந்து இவர் செய்த அட்டகாசங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

அதிலிருந்து அனைவரும் இவரை ஷகிலா அம்மா என்று அழைத்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியிருந்த ஷகிலா தற்போது யூடியூபில் ஒரு சேனல் ஒன்றையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதில் இவர் பல பிரச்சனைகளை பற்றியும் துணிச்சலாக பேசி வருகிறார் சமீபத்தில்கூட பயில்வான் ரங்கநாதனை இவர் பேட்டி எடுத்தார்.

இந்நிலையில் இவர் சொந்தமாக ஒரு ஓடிடி நிறுவனம் தொடங்க இருப்பதாகவும் பேச்சுகள் அடிபடுகிறது. இதை கேள்விப்பட்ட பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் இப்படி ஒரு நிறுவனத்தை சொந்தமாக தொடங்குவதற்கு எக்கச்சக்கமாக பணம் தேவைப்படும்.

அப்படி இருக்கும்போது ஷகிலா எப்படி இதை ஆரம்பிப்பார் என்று பலரும் யோசித்த நிலையில் தற்போது அவரைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது அவர் சில சட்ட விரோதமான செயல்களை செய்திருக்கிறார் என்பது தற்போது வெளியுலகத்துக்கு தெரிய வந்துள்ளது.

அது என்னவென்றால் ஷகிலா பல பெரும்புள்ளிகளையும், சில அரசியல்வாதிகளையும் தன் கையில் போட்டுக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். இப்போது சினிமாவில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் இவரிடம் தீர்வுக்கு வருகிறது.

அதை அவர் பெரிய முதலாளிகளை வைத்தும், அரசியல் வட்டாரங்களில் தனக்கு தெரிந்த சிலரை வைத்தும் தீர்த்து வருகிறாராம். அப்படி செய்வதற்கு இவர் எக்கச்சக்கமாக பணமும் வாங்குகிறாராம். இப்படி அதன் மூலம் கல்லா கட்டிய பணத்தை வைத்துதான் சகிலா சொந்தமாக ஓடிடி நிறுவனத்தைத் தொடங்க போவதாக பேச்சு அடிபடுகிறது.