புதன்கிழமை, ஜனவரி 15, 2025

என் செல்லத்த யாருடா அப்படி சொன்னது.? அமுல் பேபி போல் அடுத்த ரவுண்டுக்கு தயாரான சமந்தாவின் வைரல் புகைப்படம்

Actress Samatha: சமந்தா இப்போது ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்திருந்த குஷி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் அவர்களின் கெமிஸ்ட்ரி எதிர்பார்த்ததற்கும் மேலாகவே இருந்து ரசிகர்களை திணறடித்தது.

அதைத்தொடர்ந்து சமந்தா சோசியல் மீடியா பக்கத்திலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ரசிகர்களிடம் நேரலையில் பேசிய போது மையோசிடிஸ் பிரச்சனையின் காரணமாக எடுத்துக் கொண்ட மருந்துகளால் பக்க விளைவு ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

Also read: 5 மடங்கு லேடி சூப்பர் ஸ்டாரை விட மேல் என காட்டிய சமந்தா.. இந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட திரிஷா

அதனால் அவருடைய தோலின் நிறம் மாறிவிட்டதாகவும் வெளியில் தல காட்ட முடியவில்லை எனவும் பல்வேறு செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்தாலும் உங்களை எங்களுக்கு பிடிக்கும் என்று ஆறுதல் வார்த்தைகளை கூறி வந்தனர்.

ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் சமந்தாவின் ஒரு போட்டோவை பார்க்கும் போது அதெல்லாம் பொய்யா கோபால் என்றே கேட்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு அமுல் பேபி போல் புது பொலிவுடன் அவர் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் யாருடா அது செல்லத்தை பற்றி இப்படி ஒரு புரளியை கிளப்பினது என குமுறி வருகின்றனர்.

Also read: டாப் 10 நடிகைகளின் சொத்து மதிப்பு.. சமந்தாவை பின்னுக்கு தள்ளிய தமன்னா

அந்த வகையில் உடல்நல பிரச்சனையால் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சமந்தா இப்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகி இருக்கிறார். அதன்படி அடுத்ததாக அவர் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகி வரும் சென்னை ஸ்டோரிஸ் வெளிவர இருக்கிறது.

இதன் மூலம் அவர் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். அதை தொடர்ந்து சிட்டாடல் வெப் சீரிஸும் வெளிவர இருக்கிறது. இதிலும் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தை தான் ஏற்று நடித்துள்ளார். மேலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படியாக விட்ட இடத்தை பிடித்த குதூகலமாக தயாராகி வரும் சமந்தாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து கொண்டிருக்கிறது.

அமுல் பேபி போல் அடுத்த ரவுண்டுக்கு தயாரான சமந்தா

samantha-actress
samantha-actress

Trending News