வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வீட்டிற்கு உள்ளேயே விடாமல் துரத்திய லதா.. கடுப்பான தனுஷ் போட்ட பெரிய குண்டு

சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இரு குடும்பத்தினரும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு சம்மதிக்காமல் உள்ளனர்.

ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய பட வேலைகளில் பிஸியாக உள்ளார். தற்போது ஐஸ்வர்யா, ராகவா லாரன்ஸுடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல் தனுஷூம் தான் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷிற்கு பல்வேறு வழிகளில் இருந்து பிரச்சனை வர தொடங்கியுள்ளது.

தற்போது லதா ரஜினிகாந்த் தனுஷின் சினிமா வாழ்க்கையை முற்றுப்புள்ளி வைக்க பல திட்டங்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இனிமேல் எந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தனுஷுக்கு படவாய்ப்புகள் கொடுக்கக்கூடாது என லதா கூறியுள்ளார். இதனால் தனுஷுக்கு எந்த புதிய பட வாய்ப்புகளும் வராமல் உள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட தனுஷ் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று லதாவிடம் சமரசமாக பேசலாம் என சென்றுள்ளார். அப்போது வாசலிலேயே தடுத்து நிறுத்திய காவலாளி தனுஷை வீட்டுக்குள்ளேயே விடவில்லையாம். நான் வந்து இருக்கேன் என லதா ரஜினிகாந்த்யிடம் சொல்லுங்கள் என காவலாளியிடம் தனுஷ் கூறியுள்ளார்.

ஆனால் லதா நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை அவர்களைப் போகச் சொல்லுங்கள் என கூறியுள்ளார். அதைக் கேட்ட தனுஷ், லதாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து தனுஷ் மீண்டும் அவரது வீட்டிற்கு திரும்பினார்.

மேலும், தனுஷ் இனிமேல் உங்களை பார்க்க நான் வரமாட்டேன். இதுவே நான் வருவது கடைசி முறை என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். என்னுடைய சினிமா வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என கோபமாக கூறிவிட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைக் கேட்ட தனுஷ் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

Trending News