வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லத்தி படத்திற்கு கம்பீரமாக உடம்பை ஏற்றிய விஷால்.. வைரலாகும் ஜிம் புகைப்படம்

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி, வீரமே வாகை சூடவா போன்ற படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் லத்தி. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப போலீஸ் கெட்டப்பில் நடிக்கும் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள லக்கி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான சண்டைக் காட்சிகளை இயக்குனர் வினோத் குமார் எடுத்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் உள்ளது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளுக்காக தொடர்ந்து வொர்க் அவுட் செய்துகொண்டிருந்த விஷால் கம்பீரமாக உடம்பை ஏற்றி தயார் செய்து வைத்திருக்கிறார். தற்போது லத்தி படத்தின் கடைசி சண்டைக் காட்சிக்கு தன்னை தயார் செய்து கொண்ட விஷாலின் முரட்டு புகைப்படத்தை, அவரே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஷால் இந்த புகைப்படத்தில் உடலை ஏற்றி மிகவும் சிறப்பாக காணப்படுகிறார். இவருடைய இந்த ஜிம் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதுவரை விஷால் நடிப்பில் வெளியான படங்களை விட லத்தி திரைப்படம் முதல் முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

வழக்கமான விஷால் படத்தை போலவே லத்தி படமும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது. மேலும் இந்தப்படத்தில் 12-வது முறையாக விஷாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர்.

மும்முரமாக எடுக்கப்பட்டிருக்கும் எடுத்துக் கொண்டிருக்கும் லத்தி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நிறைவடைந்தபின் கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vishal-cinemapettai
vishal-cinemapettai

Trending News