திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சைலன்டா சம்பளத்தை உயர்த்திய லாரன்ஸ்.. ருத்ரன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா?

அப்போது பெரிய நடிகர்கள் கூட கையில் ஒன்று, இரண்டு படங்கள் தான் வைத்துள்ளார்கள். ஆனால் லாரன்ஸ் கைவசம் எக்கச்சக்க படங்கள் உள்ளது. நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்த லாரன்ஸ் அதன் பின்பு தனது தனித்திறமையை வளர்த்துக் கொண்டு இயக்குனர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்தார்.

ஆரம்பத்தில் பேய் படங்கள் என்றால் பயம் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் காமெடி ஜானரில் பேய் படங்களை எடுக்க முடியும் என காண்பித்தவர் லாரன்ஸ். முனி, காஞ்சனா என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த லாரன்ஸுக்கு காஞ்சனா 3 படம் மிகப்பெரிய சருக்களை ஏற்படுத்தியது.

Also read: லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

இப்போது சந்திரமுகி 2, ருத்ரன் மற்றும் பல படங்களில் லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்நிலையில் ருத்ரன் படத்தில் லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஏப்ரல் 24ஆம் தேதி வரை படத்தை வெளியிட கோர்ட் தடை விதித்துள்ளது. ஆகையால் தமிழ் புத்தாண்டுக்கு ருத்ரன் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலில் ருத்ரன் படத்திற்கு ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் வெளியாகி உள்ளது.

Also read: செங்கேணிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி.. அரசை விட வேகமாக செயல்பட்ட ராகவா லாரன்ஸ்!

இப்போது டாப் நடிகர்கள் சம்பளத்தை உயர்த்துவது பெரிய பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் லாரன்ஸ் சைலன்டாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அதன்படி ருத்ரன் படத்திற்கு கிட்டத்தட்ட 15 கோடி சம்பளமாக லாரன்ஸ் பெற்றுள்ளாராம். இதைவிட அதிகமாக சந்திரமுகி 2 படத்திற்கு வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் லாரன்ஸ் இவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்கினாலும் அதன் மூலம் நிறைய நன்மைகள் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது ஆசிரமத்திற்கு யாரும் நன்கொடை அளிக்க வேண்டாம் என்றும் சமீபத்தில் அவர் கூறியிருந்தார். ஏனென்றால் அவர்களுக்கு தேவையானதை தானே செய்து கொள்ளும் அளவுக்கு இப்போது சம்பளம் வாங்குவதால் அவரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்.

Also read: ஸ்டைலிஷ் ராகவா லாரன்ஸ், ஹோம்லி பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் ருத்ரன் பட புகைப்படங்கள்

Trending News