புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஒரிஜினல் கேரக்டரில் நடித்த லயா.. பகாசூரனில் இருக்கும் சீக்ரெட்

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் சமூகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்சனையை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு விதத்தில் பாராட்டுக்களை பெற்றாலும் சில சர்ச்சைகளையும் இப்படம் சந்தித்து வருகிறது. அதாவது இயக்குனர் இந்த படத்தில் செல்போன்களால் பெண்களுக்கு வரும் பாதிப்பை குறித்து ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். அதில் அவர் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் அதிகமாக வலியுறுத்தி இருக்கிறார்.

Also read: ரெண்டு நிமிடம் கட் செய்யுங்கள்.. வீடியோ ஆதாரத்தைக் காட்டி மிரட்டி விட்ட பகாசூரன் இயக்குனர்

தவறு செய்பவர்களுக்கான எந்த ஒரு கருத்தையும் அவர் தெளிவாக கூறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய இந்த சிந்தனை பிற்போக்குத்தனமானது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இயக்குனர் அது குறித்து அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த படத்தின் கதைக்காக பல விஷயங்களை நேரடியாக பார்த்து உருவாக்கி இருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்களை போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் உதவியுடன் காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வி ஜே லயா அது குறித்து மனம் திறந்துள்ளார்.

Also read: செல்வராகவனை வைத்து சூரசம்காரம் செய்த பகாசூரன் பட விமர்சனம்.. அழுத்தமான விஷயத்தை சொல்லிய மோகன் ஜி

அதாவது இந்த படத்தில் அவர் ஹாஸ்டல் வார்டனாக நடித்திருப்பார். மேலும் வார்டன் என்ற பெயரில் சில தேவையில்லாத வேலைகளையும் அவர் பார்ப்பது போன்று கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். அது குறித்து பேசிய லயா இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோது நான் அதை திட்டவட்டமாக மறுத்தேன். ஆனால் இயக்குனர் நான் செய்தால் இந்த கதாபாத்திரம் நன்றாக வரும் என கூறியதால் தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தேன் என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரம் ஒரிஜினலாக நடந்த ஒரு விஷயத்தை மையப்படுத்தியது தான். பல வருடங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு குற்றச்சாட்டுகளுடன் பெண் வார்டன் ஒருவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்தார். அவர் பெயர் கூட எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிக்கும். ஆனால் அதன் பிறகு அந்தப் பிரச்சினை வேறு விதத்தில் முடிந்தது என கூறியிருக்கிறார். இதன் மூலம் பகாசூரன் திரைப்படத்தில் இப்படி ஒரு சீக்ரெட் இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

Also read: பெண் மோகத்தில் நடக்கும் அநீதியை துணிச்சலாக கையிலெடுத்த மோகன்ஜி.. பகாசூரன் கதை இதுதான்

Trending News