லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் 23-வது படமான ‘AA23’ படத்தில் இணைய உள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகவுள்ள இப்படம் பிரம்மாண்ட ஆக்ஷன் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.
இப்படத்திற்கான திரைக்கதைப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், வரும் 2027 ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படம் 2027-ம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2028 ஜனவரி மாதத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, லோகேஷின் LCU தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ‘AA23’ படத்தை முடித்ததும் கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து ‘விக்ரம் 2’ மற்றும் சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்களும் உருவாகும் என லோகேஷ் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் இந்த அப்டேட்கள் வைரலாகி வருகின்றன.




