Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு கூடுதலாக இருந்து வருகிறது.
லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் கூலி படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த படத்தில் நாகர்ஜூன், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என எக்கச்சக்க பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
அதுவும் படத்தை எல்லா மொழியிலும் பிரமோஷன் செய்ய வேண்டும் என்பதற்காக பல மொழிகளில் முக்கிய நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ். இங்கு ரஜினிக்கு எவ்வாறு மாஸ் ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல் தெலுங்கில் நாகர்ஜுனாவுக்கும் உண்டு.
கூலி படத்தில் இருந்து கசிந்த சண்டை காட்சி
மேலும் லோகேஷின் படங்களில் எப்போதுமே ஆக்ஷ்ன் காட்சிகள் பயங்கரமாக இருக்கும். அந்த வகையில் நாகர்ஜுனாவின் ஆக்சன் காட்சியை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது கசிந்து இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
வெள்ளை நிற கோட் ஷாட்டில் வெறியுடன் மாஸ் டயலாக் பேசும் நாகார்ஜுனாவை பார்த்து ரசிகர்கள் குதிக்களித்துள்ளனர். ஆனால் கூலி படக்குழுவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வீடியோ எப்படி கசிந்தது என்று குழப்பத்தில் படக்குழு இருந்து வருகிறார்கள்.
சமீபத்தில் தான் கூலி படப்பிடிப்பு தளத்தில் ஓணம் கொண்டாடிய வீடியோவை மகிழ்ச்சியுடன் படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் தலைவர் செமையாக டான்ஸ் ஆடி இருந்தார். இப்போது எதிர்பாராத விதமாக கூலி படத்தின் ஆக்சன் காட்சி கசிந்துவிட்டது.
ஓணம் கொண்டாடிய ரஜினி
- ரஜினி பொண்ணுக்கு நாக்குல தான் சனி
- கூலி, ஜெய்லர் 2 படம் ரிலீஸ் தேதியை ஸ்கெட்ச் போட்ட ரஜினிகாந்த்
- ரஜினி, விஜய் போன்ற ஹீரோக்களை சறுக்க வைக்கும் சூதாட்டம்