வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சுதந்திர தின விழாவில் புதுப்பட அப்டேட்டை வெளியிட்ட லெஜன்ட்.. இதுக்காகத்தான் இவ்வளவு நாள் வெயிட்டிங்

Legend Saravana: இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன். இவர் நடித்த லெஜன்ட் படத்தினால் மக்களிடையே லெஜன்ட் சரவணா என்று அடையாளப்படுத்தப்படுகிறார். முதல் படமே ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு, முன்னணி ஹீரோயின்கள் என ஆச்சரியப்பட வைத்தார் இவர்.

ஆரம்பத்தில் தன்னுடைய கடைகளில் விளம்பர வீடியோக்களில் நடிக்க ஆரம்பித்தார் லெஜன்ட் சரவணா. மற்ற நடிகர்களை எதிர்பார்க்காமல் தானே களத்தில் இறங்கியதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தான் அவர் படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, லெஜன்ட் படத்தில் நடித்தார்.

Also Read:விக்ரம் படம் ஒன்னும் கமலால ஓடல.. ரஜினியை மிஞ்சிட்டோமுன்னு நினைக்கவே கூடாது ஏன் என கூறும் பிரபலம்

லெஜன்ட் படத்தின் முதல் நாள், முதல் ஷோ தமிழ் சினிமா ரசிகர்களால் அதிக வரவேற்பு பெற்றது. படத்திற்கு கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்திருந்தது. தியேட்டர் ரிலீஸ்க்கு பிறகு, தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் லெஜன்ட் படம் சிறுவர்களுக்கு பிடித்த படமாக இருக்கிறது.

இந்த நிலையில் அந்தப் படத்திற்குப் பிறகு லெஜன்ட் சரவணாவின் அடுத்த படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது. இயக்குனர்களிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும், இல்லை இனி அவர் படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் மாறுபட்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதன் பின்னர் சரவணா, காஷ்மீரில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அவர் லியோ படத்தில் நடிப்பதாக கூட செய்திகள் பரவியது.

Also Read:ஓரளவுக்கு மேல பேச்சே இல்ல வீச்சு தான்.. சொல்லி அடித்த சூப்பர் ஸ்டார், மிரட்டும் 5-ம் நாள் வசூல்

சுதந்திர தினமான இன்று லெஜன்ட் சரவணா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் குழந்தைகளுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருக்கும் சரவணாவிடம் ஒரு சிறுவன் உங்கள் படம் லெஜன்ட் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது, நீங்கள் அடுத்து எப்போது படம் நடிப்பீர்கள் என்று கேள்வி கேட்கிறான்.

அதற்கு பதில் அளித்த சரவணா, நல்ல கதைக்காகத்தான் இவ்வளவு நாளாக காத்துக் கொண்டிருந்தேன். தற்போது ஒரு நல்ல கதை கிடைத்திருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் படத்தை நடித்து முடித்து ரிலீஸ் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். சுதந்திர தினத்தன்று ஒரு வித்தியாசமான முயற்சியில் இவர் தன்னுடைய புது பட அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

Also Read:தெரியாத்தனமாக தனுஷுக்கு ரஜினி செய்த நல்லது.. ஜெயிலரால், கேப்டன் மில்லருக்கு எகிறும் கெடுபிடி

Trending News