போற போக்கில் கொளுத்தி போட்ட அண்ணாச்சி.. விஜய்யையும், ரஜினியையும் வச்சி செஞ்ச லெஜெண்ட்

Legend Saravanan speech about super star stories and stardom issue: செய்யும் தொழிலே தெய்வம் என்பதைதே கொஞ்சம் மாற்றி “நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும். நாம் உயர்ந்தால் நாடு உயரும், அன்பால் இணைந்து செயல்படுவோம்” என்பதோடு மட்டும் நின்று விடாமல் காக்கா,கழுகு கதைகள் அவருக்கு இந்த பட்டம்,இவருக்கு இந்த பட்டம் என்று சொல்வதால் எந்த யாருக்கும்  எந்த பிரயோஜனமும் இல்லை.” என்று சில பல எக்ஸ்ட்ரா பிட்டுகளையும் போட்டு கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் லெஜெண்ட் சரவணன். “யாருப்பா இவர்! இவ்வளவு நாள் எங்கையா இருந்தீங்க!”.அனைவராலும் முணுமுணுக்கப்படுகிறார்.

வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து செயல்பட்டு, வியாபாரத்தில் பல சிறப்பான நுணுக்கங்களை புகுத்தி வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்து வரும்  சரவணா ஸ்டோர்ஸ்“ புகழ் லெஜெண்ட் சரவணன் தன்னுடைய வியாபாரத்திற்காக விளம்பரங்களில் பல நடிகர், நடிகைகளை முன்னணிப் படுத்திய அவர், ஒரு கட்டத்தில் தானே விளம்பர மாடலாக முன்னணி கதாநாயகிகளுடன் அறிமுகமாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்தார். தொடக்கத்தில் பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும் அவை அனைத்தையும் கண்டு கொள்ளாதவர் சரவணன்.

Also Read:நான் நடிகன் மட்டுமல்ல என்பதை நிரூபித்த ரஜினி.. அரைமணி நேரத்தில் அரங்கை அதிர வைத்த தலைவர்

வியாபாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் லெஜெண்ட் சரவணன், தன்னை கேலி கிண்டல் செய்தவர்களை சிறிதும் சட்டை செய்யாமல் சென்ற ஆண்டு தானே தயாரித்து ஜே டி ஜெர்ரி இயக்கத்தில் “தி லெஜெண்ட் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமாகி பல நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.  சினிமாவை தவிர, கஜா புயல் நிவாரணம், மலேசியாவில் நடைபெற்ற நடிகர் சங்க கலை நிகழ்ச்சி போன்றவற்றிலும் நிதிகளை அள்ளிக் கொடுத்துள்ளார்.

தற்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் கட்டிடத்தை திறந்து வைத்த கையோடு, போற போக்குல பல பட்டாசுகளையும் கொளுத்தி போட்டு உள்ளார். தலைவர் ரஜினி மற்றும்  விஜய் பேசிய காக்கா கழுகு கதைகளை சாடும் விதமாக, “சினிமா தற்போது சிறந்த பொழுதுபோக்கு துறையாக செயல்பட்டு வருகிறது அதில் கதைகள் மற்றும் பட்டங்கள் வேண்டாம் உழைப்பால் மட்டுமே உயர்வோம்” என்று பேசியுள்ளார்.

“மக்கள் தன்னை நேர்மறையாகவோ,எதிர்மறையாகவோ பேச வேண்டும்!! பேசாமல் மட்டும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் லெஜெண்ட் சரவணன். விஜய் மற்றும் ரஜினி மட்டும் பேசி வந்த இருந்த காக்கா கழுகு கதைகள்.இவரின் இச்செயலால் தற்போது கோலிவுட்டில் அனைவரின் பேசும் பொருளாக மாறி சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Also Read:லியோ மேடை கிடைக்காததால் பாட்டு வரிகள் மூலம் பதிலடி கொடுத்த விஜய்.. காக்கா கழுகு சண்டை ஓயாது போல