வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோ மூன்றாம் நாள் வசூல் விவரம் இதுதான்.. ஜெயிலரை வீழ்த்த முடியாமல் திண்டாடும் தளபதி

Leo 3rd Day Collection: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் வெகுஜனமான ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருக்கிறது. மிகப் பெரிய அளவில் ஹைப் ஏற்றப்பட்டு கடைசியில் படம் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதுதான் நிறைய பேர்களின் கருத்தாக இருக்கிறது. இருந்தாலும் லியோ வசூலில் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறது.

லியோ படத்திற்கு இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தின் முதல் நாள் ரிலீஸ் உலகம் எங்கும் திருவிழா போல் கொண்டாடப்பட்டது. படத்தின் முதல் நாள் வசூல் 148.5 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. இதுவரை வெளியான இந்திய படங்களில் முதல் நாளில் அதிக வசூலை பெற்றது லியோ தான்.

லியோ படத்தின் இரண்டாவது நாள் வசூல் விவரம் பற்றி தயாரிப்பு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் இரண்டாவது நாள் வசூல் ரொம்பவும் மந்தமாக இருந்ததால் தான். இரண்டாவது நாள் லியோ படம் தமிழ்நாட்டில் 24 கோடியும், மத்த மாநிலங்களில் ஆறு கோடியும் தான் வசூலித்தது.

மந்தமாக இருந்த இரண்டாவது நாள் வசூலில் இருந்து மூன்றாவது நாள் வசூல் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இண்டஸ்ட்ரி டிராக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று லியோ படம் 40 கோடி வசூலித்திருக்கிறது. அதாவது முந்தைய நாள் வசூலை கம்பர் செய்து பார்க்கும் பொழுது 11% இது அதிகம். ரிலீஸ் ஆன மூன்று நாட்களில் உலகளாவிய வசூல் நிலவரப்படி லியோ 200 கோடியை எட்டி இருக்கிறது.

என்னதான் லியோ படம் வசூலில் மூன்றாவது நாள் விஸ்வரூபம் எடுத்தாலும் ஜெயிலர் படத்தின் சாதனையை தாண்ட முடியவில்லை. ரஜினியின் ஜெயிலர் படம் இந்திய அளவில் இரண்டாவது நாள் 128 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் விஜய் நடித்த லியோ படம் 116 கோடி தான் வசூல் செய்திருக்கிறது. இரண்டாவது நாள் ஏற்பட்ட மந்த நிலைமை தான் இதற்கு முக்கிய காரணம்.

வெளிநாட்டு வியாபாரத்தை பொருத்தவரைக்கும் லியோ படம் ரிலீஸ் ஆன 2 நாட்களில் 90 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் உலக அளவில் கடந்த மூன்று தினங்களில் லியோ படம் ஒட்டுமொத்தமாக 280 கோடி வசூல் செய்து இருக்கிறது. வார இறுதி நாட்கள் ஆன இன்று மற்றும் ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News