புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அங்க வச்சா நான் தான் சாகணும்.. லலித்திடம் சண்டை போட்ட தளபதி, இன்னுமா ஒரு முடிவுக்கு வரல

Leo Audio Launch: லியோ படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ஆடியோ லான்ச் இன்றுவரை இழுபறியாக தான் இருக்கிறது. அட ரெண்டுல ஏதாவது ஒரு முடிவு சொல்லுங்கப்பா என விஜய் ரசிகர்களே வெறுப்பாகும் அளவிற்கு இடியாப்பசிக்கலாக இந்த பிரச்சனை இழுத்துக் கொண்டே போகிறது. இதுக்கு முக்கிய காரணமே தளபதி விஜய் தானாம்.

இந்த ஆடியோ வெளியீட்டு விழா பற்றி விஜய் பயங்கர குழப்பத்தில் இருப்பதாகவும், அவர் சரியாக முடிவு எடுக்காமல் இருப்பதால்தான் இன்னும் இழுபறியாக இந்த பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. எப்போதுமே தன் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் உற்சாகமாக இருக்கும் விஜய், லியோ படத்திற்கு மட்டும் ரொம்பவே ஜெர்க் ஆகி இருக்கிறார்.

Also Read:மாஸ் காம்போவில் உருவாகும் அட்லீயின் படம்.. தலையசைத்த 2 ஜாம்பவான்கள்

இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி தயாரிப்பாளர் லலித் லியோ பட ஆடியோ வெளியீட்டு விழாவை மதுரையில் வைக்கலாம் என்று விஜய் இடம் சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய்க்கு இது சுத்தமாக விருப்பம் இல்லையாம். மதுரை என்றால் கிட்டதட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள், கண்டிப்பாக சமாளிக்க முடியாது என்பதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் நடிகர் விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு என்பது அரசியலை நோக்கி தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதிலும் லியோ படபிடிப்பு ஆரம்பித்த நேரத்தில் இருந்து விஜய் அதிகமாகவே இதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இசை வெளியீட்டு விழா என்று ஆரம்பித்தால் அரசியல் ரீதியாக ஏதாவது பிரச்சனையை சந்திக்க நேரிடுமோ என விஜய் யோசிக்கிறார்.

Also Read:அட்லீக்கு மட்டும் கிடைக்கும் மாலை, மரியாதை.. கண்டுகொள்ளாமல் கை கழுவி விடப்பட்ட அஜித் நண்பர்

இந்த முறை விஜய்க்கு நாலா பக்கமும் ரவுண்டு கட்டி அடிக்கும் அளவிற்கு பிரச்சனைகள் இருப்பதால், ஆடியோ வெளியீட்டு விழா என்று வைத்து, அதன் மூலம் ஏதாவது சர்ச்சை கிளம்பி விடுமோ, பேசாமல் வெளிநாடுகளில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட்டால், இது போன்ற பிரச்சனையில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று தான் முன்பு திட்டமிட்டு இருந்தார்.

பின் அதுவும் வேலைக்காகாது என்று தெரிந்த பிறகு தான், தமிழ்நாட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. இருந்தாலும் இன்று வரை லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என இந்த மூன்று பெரிய நகரங்களில் எங்கு வைக்கலாம் என்று தலையை உருட்டி வருகிறார்கள் லியோ பட குழுவினர்.

Also Read:லோகேஷுக்கு அட்லீய விட கம்மியா சம்பளம் கொடுத்து கரெக்ட் செய்த சன் பிக்சர்ஸ்.. காப்பி கதை செய்யும் ஸ்மார்ட் வொர்க்

Trending News