செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

ஆயிரம் சொல்லு, வலிமையை முந்த முடியாத லியோ.. ஓப்பனிங் நாளில் TN வசூலில் மாஸ் காட்டிய 3 படங்கள்

TN Collection On Opening Day Movies: எப்பதான் ரிலீஸ் ஆகுமோ என்று ஒவ்வொரு நாளும் காலண்டரை பார்த்து வந்த ரசிகர்களுக்கு ட்ரீட்டாக லியோ நேற்று வெளியானது. ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த இப்படம் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்பே மற்ற மாநிலங்களில் வெளியானதால் உடனுக்குடன் விமர்சனங்களும் சோசியல் மீடியாவை கலக்கி வந்தது.

அதில் சில நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதையெல்லாம் லியோ ஓரம் கட்டி விட்டது என சொல்லும் வகையில் உலக அளவில் முதல் நாளிலேயே 145 கோடி வரை வசூலித்து காட்டி இருக்கிறது. இதைத்தான் இப்போது விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

ஏனென்றால் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகர்களும் இந்த சாதனையை செய்தது கிடையாது. அதை லியோ சாதித்தது பாராட்டக்கூடிய விஷயம் தான். ஆனால் வசூல் நிலவரம் என்ற பெயரில் சிலர் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக சினிமா விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை லியோ 27.63 கோடிகள் தான் வசூலித்துள்ளது. 35 கோடி என சில பொய்யான தகவல்கள் பரவுகின்றன. உண்மையில் இதற்கு சில வலுவான காரணமும் இருக்கிறது. அதாவது இங்கு லியோ அதிகபட்ச ஸ்கிரீன்களில் வெளியாகவில்லை. அதேபோன்று காலை 4 மற்றும் 7 மணி காட்சிகளும் கிடையாது.

அதனாலேயே வசூலும் குறைவாக இருக்கிறது. மேலும் இதுவரை முதல் நாளில் தமிழகத்தில் அதிக வசூல் பெற்ற படங்கள் என்று பார்த்தால் வலிமை, அண்ணாத்த, 2.0 ஆகிய மூன்றும் இருக்கிறது. அதில் வலிமை 36.17 கோடி வரை வசூலித்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக அண்ணாத்த 34.29 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது.

மூன்றாவதாக 2.0, 33.58 கோடிகளை வசூலித்திருக்கிறது. அந்த வகையில் லியோ ஓப்பனிங் வசூலை பெறுவதற்கு கொஞ்சம் தட்டு தடுமாறி தான் இருக்கிறது. இருந்தாலும் 9 மணிக்கு காட்சிகள் ஆரம்பித்ததால் இது அதிகபட்ச கலெக்ஷன் தான் எனவும் எனவும் கருத்துக்கள் வெளியாகி வருகிறது. ஆக மொத்தம் வலிமை முதலிடத்தில் கெத்து காட்டி இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

Trending News