Actor Vijay: முன்னணி நடிகர்களின் படங்கள் வெளி வருகிறது என்றாலே ரசிகர்கள் திருவிழா மாதிரி கொண்டாடுவதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய்யுடன் தற்போது வரை எந்த படங்களும் மோதுவதற்கு தயாராக இல்லை. அதனால் லியோ படம் தனிக்காட்டு ராஜாவை போல் ஜெயித்து வசூல் அளவில் சாதனை படைத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது வெளிவந்த தகவலின் படி லியோ படத்திற்கு போட்டியாக தமிழ் படங்கள் வெளியாக விட்டாலும் மற்ற பொழிபடங்கள் அதே தேதியில் வெளிவர இருக்கிறது.
Also read: ரஜினி, விஜய்யை விட மிக மிக சொற்ப சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டார்ஸ்.. மம்மூட்டிக்கு கூட இவ்வளவுதானா?
அந்த வகையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா , சிவராஜ்குமார், ரவி தேஜா மற்றும் பிரித்விராஜ் போன்ற பெரிய ஹீரோக்கள் படங்களும் அக்கட தேசத்தில் வெளியாக இருக்கிறது. அதனால் அந்த மாநிலங்களில் விஜய் படம் ரிலீஸ் ஆவது சற்று குறைந்து விடும். அப்படியே ரிலீஸ் ஆனாலும் அங்குள்ள ரசிகர்கள் எந்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள் என்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது.
எப்படி பார்த்தாலும் இதில் லியோ படம் சற்று பின்னடைவை பார்க்கும். அதே போல் லியோ படத்திற்கு வரக்கூடிய கலெக்ஷனும் கொஞ்சம் குறைந்து விடும். அந்த வகையில் ஒரு வாரத்தில் வரக்கூடிய கலெக்ஷனை எடுப்பதற்கு கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also read: அட்லீக்கு டிமிக்கி கொடுத்த விஜய்.. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எஸ்கேப் ஆன தளபதி
அதனால் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ படம் வசூல் அளவில் கம்மியாக போகிறது. அதே மாதிரி அக்கட தேசத்தில் வெளிவரும் படங்கள் பெரிய ஹிட் அடித்து விட்டால், விஜய் படத்தை பார்ப்பதற்கு மக்கள் குறைந்து விடுவார்கள். ஏற்கனவே கொஞ்ச நாட்களாக ரஜினிக்கும், விஜய்க்கும் மிகப்பெரிய போட்டி நிலவிக் கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஜெயிலர் படம் வசூல் அளவில் மிகப்பெரிய சாதனையை படைத்துவிட்டது. இதை ஈடு கட்டும் விதமாக விஜய்யின் லியோ படம் வசூலை முறியடித்தால் மட்டுமே இவரால் கொஞ்சம் கெத்து காட்ட முடியும். ஆனால் போற போக்க பார்த்தா அதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பில்லை என்பது போல் தான் தோன்றுகிறது. ஒருவேளை லோகேஷ் கதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்தால் அத்தனை படங்களையும் தூக்கி சாப்பிட்டு விடும்.